சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்வம்நெல் சாகுபடிக்கு மானாவாரி நெல் விதைப்புக்கு இப்போதே தயார் நிலையில்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

மாவட்டத்தில் 73 சதவீதம் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலும் மானாவாரி சாகுபடியாகவும், மிகக்குறைந்த அளவில் இறவை பயிராக சாகுபடி செய்யப்படுகிறது.

ஆண்டுதோறும் பருவ மழையை நம்பி ஆகஸ்ட்டில் மானாவாரியாக நெல் விதைப்பு பணியை விவசாயிகள் செய்வார்கள். அக்டோபரில் கடந்த ஆண்டு நல்ல மழை பெய்து நெல் மகசூல் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த ஆண்டு ஒரு மாதத்திற்கு முன்பே வயல்களில் உழவு செய்து தயார் நிலையில் உள்ளனர்.பருவமழை துவங்கும் முன்பே மத்திய கால நெல் ரகங்கள் விதைக்கப்படும்.

மழை தாமதமானால்குறுகியகால நெல் ரகங்கள்விதைக்கப்படும். 105 முதல் 135 நாட்களில் விளையும் அதிக மகசூல்தரும் உள்ளூர் நெல் ரகங்கள் மாவட்டத்தில் விதைக்கப்படுகின்றன. ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம் பெரிய கண்மாய் பாசன பகுதிகளில் ஆக., முதல் நவ., வரை நெல் சாகுபடி செய்யப்படுகிறது

.கடந்த ஆண்டில் 1 லட்சத்து 27 ஆயிரம் ஏக்கரில் மானாவாரி நெல் சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்யும் என விவசாயிகள் எதிர்பார்த்து மானாவாரி நெல் விதைப்புக்கு இப்போதே தயார் நிலையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X