தீவிரம்கம்பம் மெட்டு சாலை பணிகள் : கேரள போலீசார் தடுத்து நிறுத்த முயற்சி| Dinamalar

தமிழ்நாடு

தீவிரம்கம்பம் மெட்டு சாலை பணிகள் : கேரள போலீசார் தடுத்து நிறுத்த முயற்சி

Added : ஜூலை 27, 2020
Share

தேனி:தேனி மாவட்டத்திலிருந்து கேரளா செல்ல போடிமெட்டு, குமுளி, கம்பமெட்டு ரோடுகள் உள்ளன. இதில் கம்பமெட்டு ரோடு அதிக பயன்பாடு கொண்டதாகும். தினமும் நுாற்றுக்கணக்கில் தோட்ட தொழிலாளர்கள் ஜீப்பில், கேரள ஏலத்தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வார்கள்.

ஏல விவசாயிகளும் அதிகாலையில் செல்வது வழக்கம். கம்பத்திலிருந்து குமுளி வழியாக சென்றால் 20 கி.மீ., துாரம்பயணம் செய்ய வேண்டும். கம்பமெட்டு வழியாக 13 கி.மீ.,துாரம் பயணம் தான். எனவே குறுகலான கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட கம்பமெட்டு ரோடு அடிக்கடி சேதமடைந்து விடுகிறது. இந்த ரோடு ரூ.2.60 கோடியில் பராமரிப்பு பணி ஜூலை 15ல் துவங்கியது. 9 வது கி.மீ., துாரத்திலிருந்து 12 வது கி.மீ., துாரம் வரை உள்ள 4 கி.மீட்டர் பராமரிப்பு செய்யப்படுகிறது.

இதற்கென காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. செக்போஸ்ட் அருகில் பணிகள் மேற்கொண்டபோது கேரள போலீஸ், வனத்துறையினர் எல்லையை காரணம் காட்டி பணி செய்ய விடாமல் இடையூறு செய்தனர். தமிழக அதிகாரிகளின் உரிய ஆவணங்களை கேட்டவுடன் கேரள அதிகாரிகள் திரும்பி சென்றனர். இருந்தபோதும் இன்னமும் இடையூறு தொடர்கிறது. எனினும் தமிழக அதிகாரிகள் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இப் பணி இம் மாத இறுதியில் நிறைவு பெறும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X