பொது செய்தி

தமிழ்நாடு

காட்டு யானை இடம் பெயர்வு விவசாயிகள் நிம்மதி

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

தேவாரம்:தேவாரம் பகுதியில் ஒற்றை காட்டு யானை தாக்கி 13 பேர் பலியாகியுள்ளனர். தென்மேற்கு பருவமழை சீசனில் இந்த யானையிடம் சிக்கி தொழிலாளர்கள் பலியாவது மூன்றாண்டுகளாக நடந்தது.
இந்தாண்டு அதுபோன்ற துயரம் நடைபெறாமல் தடுக்க வனத்துறையினர் இரு வாகனங்களில் இரவு ரோந்தில் ஈடுபட்டனர். யானை வழக்கமாக நடமாடும் பகுதியில் பட்டாசு வெடித்து வனப்பகுதியை விட்டு வெளியேறுவதற்கு தடையேற்படுத்தினார்கள். அந்த யானை கேரளா மதிகெட்டான் கானல் பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளது. இரு வாரங்களாக யானையின் நடமாட்டமில்லாததால் தேவாரம் விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X