பொது செய்தி

தமிழ்நாடு

தேனியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆலோசனைக் கூட்டம்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

தேனி:தேனியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆலோசனைக் கூட்டம் நகராட்சி கமிஷனர் நாகராஜன் தலைமையில் நடந்தது.

அதில், பெரியகுளம், மதுரை ரோட்டில் காலை 8:00 மணி வரை சரக்குகளை இறக்கலாம். பிற பகுதிகளுக்கு சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்கள் பகல் 2:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை அனுமதிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன் வரும் வாகனங்கள் மேற்கு சந்தையில் நிறுத்தி, அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு இறக்க வேண்டும்.

கம்பம் ரோட்டில் இருந்து சுப்பன் தெருவிற்குள் வரும் வாகனங்கள் திட்டச்சாலை வழியாக மதுரை ரோடு சென்று பிற பகுதிகளுக்கு செல்ல ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. கம்பம் ரோட்டில் பழைய பஸ் ஸ்டாண்டு முன்புறம், பெரியகுளம் ரோடு கிழக்கு, மேற்கு சந்தை வளாகம், மதுரை ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை பயணியர் விடுதி எதிர்புறம், சுப்பன்தெரு திட்டச்சாலை காலியிடங்களில் வாகனங்களை நிறுத்தலாம். இம் மாற்றம் இன்று முதல் அமலாகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X