பொது செய்தி

தமிழ்நாடு

வீடு, அலுவலகங்களை அலங்கரிக்கும் 'உட்டன் அனிமல் ஹெட்'

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
 வீடு, அலுவலகங்களை அலங்கரிக்கும்  'உட்டன் அனிமல் ஹெட்'

தேனிதேனியில் கலைநயத்துடன் தயாராகும் 'உட்டன் அனிமல் ஹெட்' எனும் அலங்கார மரப்பொம்மைகளுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.

முந்தைய காலங்களில் வீரத்தை வெளிப்படுத்தும் செயலாக விலங்குகள், பறவைகள் வேட்டையாடி அதன் தலை,கொம்பு, தோல் ஆகியவற்றை பக்குவப்படுத்தி பங்களாக்கள், அரண்மனைகள், வீடுகளில் அலங்காரத்திற்கு வைத்து அழகு பார்ப்பர். தற்போது வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்களில் இச்செயல்கள் குற்றம் என நடவடிக்கை பாய்வதால் தவிர்க்கப்படுகிறது.

ஆனாலும் வன விலங்குகள், பறவைகள் அழகிற்கு எப்போதும்மவுசு குறைவதில்லை. எனவே இயற்கை ஆர்வலர்களின் விருப்பத்தை ஈர்க்கும் வகையில் தேனி சேல்ஸ் சொசைட்டி தெருவில் சுவாதி உட் டிசைன்ஸ் மர இழைப்பகத்தில் 'உட்டன் அனிமல்ெஹட்' என்ற வன விலங்கு மர பொம்மைகளை அசத்தலாக வடிவமைத்துள்ளனர்.

'லேமினேடட் எம்.டி.எப். போர்டு' எனும் மர போர்டுகளில் காட்டு மாடு, கரடி, புள்ளிமான், குதிரை, கான்டா மிருகம், யானை போன்ற விலங்குகளின் தலை உள்ளது. நாம் விரும்பும் தெய்வங்களை அச்சு அசலாக வடிவமைக்கின்றனர்.இந்த கலைப்பொருட்களில் ஆணி அடித்தோ,பசையால் ஒட்டி இணைக்க வேண்டியதில்லை.

எல்லாமே 'பசல்ஸ்' முறையில் ஒன்றோடு ஒன்று இணைத்து பொருத்தும் வகையில் உள்ளன. வனவிலங்கு பொம்மைகள் தத்ரூபமாக தயாரித்துள்ளனர். இதனை வீடு, அலுவலகங்களில் அலங்கார பொருட்களாக வைத்து அழகுபார்க்கலாம். இதன் கம்பீரம், வடிவமைப்பின் நேர்த்தி அனைவரையும் ஈர்க்கும்.

இதனை தயாரித்த பி.டெக் பட்டதாரி தினேஷ் குமார் கூறுகையில், காரைக்குடி செட்டிநாட்டு கட்டடங்களில் மரப்பொருட்கள் அதிகம் இருப்பதால் மிகப்பழமையானாலும் இன்றும் கம்பீரமாக காட்சிதருகின்றன. தங்களது மர இழைப்பகங்களில் கதவுகளுக்கு டிசைன் அமைக்கும் சி.என்.சி இயந்திரத்தில் ஒரு சில டிசைன்களை மட்டும் பயன்படுத்துகின்றனர்.

இதில் தொழில் நுட்பத்தை மேலும் எவ்வாறு பயன்படுத்தலாம் என யோசித்து கிரியேடிவ் சிந்தனையுடன் புதிய சாப்ட்வேர் மூலம் லேமினேட் எம்.பி.எப்., போர்டுகளில் ஸ்லாட் கட்டிங்கில் ஆன பொம்மைகள் வடிவமைத்தேன். சீனா, ஜப்பானில் இதுபோன்றவை பயன்பாட்டில் உள்ளது. குழந்தைகளை அதிகம் கவரும்.

மேலும் இவைகளை புக் ஸ்டால்கள், பொருட்கள் வைக்க ஸ்டாண்டுகளாக பயன்படுத்தலாம். பொருட்களுக்கு ஏற்ப விலை உள்ளது. பரிசு பொருட்களுக்கு ஏற்றதாகவும், பயனுள்ளதாக இருக்கும்,'' என்றார். தொடர்புக்கு 99449 99233

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X