சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா வார்டில் தரமற்ற உணவு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
 கொரோனா வார்டில்  தரமற்ற உணவு

பெரியகுளம்:பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துமவனையில் கொரோனா வார்டில் 124 பேர் உள்ளனர். இவர்களுக்கு கபரசுரகுடிநீர், மிளகுபால், வெள்ளை பூண்டு பால், மூன்று வேளை உணவுடன் 4 வேளை முட்டை, வாழைப்பழம், ஜூஸ் வழங்கப்படுகிறது.

மருத்துவமனையில் இரு நாட்களாக உணவு தரம் குறைந்து கொடுப்பதாக புகார் எழுந்து உள்ளது. சிலர் உணவை பெறாமல் புறக்கணித்தனர். டாக்டர் பாபுவெங்கடேசன் கூறுகையில்: உணவு தரம் குறைவு குறித்து ஒப்பந்ததாரிடம் தெரிவித்தோம். வார்டில் உள்ளவர்களுக்கு வழங்கும் உணவுகளை, 'சாம்பிள்' தர கூறியுள்ளேன் என்றார்.

நல்லகருப்பன்பட்டி மேரிமாதா கல்லுாரியில் செயல்படும் கொரோனா சித்தா வார்டிலும் உணவு தரமில்லை என நோயாளிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். டி.எஸ்.பி ஆறுமுகம் பேச்சுவார்த்தை நடத்தினார்.கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X