செய்திகள் சில வரிகளில் : தேனி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில் : தேனி

Added : ஜூலை 27, 2020
Share
டிரைவர்கள் ஆவின் முகவராகலாம்தேனி: - வீரபாண்டி, போடி, உட்பட 10 இடங்களில் ரூ.60 லட்சம் மதிப்பில் ஆவின் விற்பனையகங்கள் துவங்கப்பட உள்ளன. இதில் ஆவின் தயாரிப்புக்கள் விற்பனை செய்யப்படும். ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் இணைந்து மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஈட்டும் வகையில் முகவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். டிரைவர்கள் ஆதார் நகல், வாகன பதிவு சான்று நகல் வழங்க வேண்டும். விபரங்கள் 04546 -290776

டிரைவர்கள் ஆவின் முகவராகலாம்

தேனி: - வீரபாண்டி, போடி, உட்பட 10 இடங்களில் ரூ.60 லட்சம் மதிப்பில் ஆவின் விற்பனையகங்கள் துவங்கப்பட உள்ளன. இதில் ஆவின் தயாரிப்புக்கள் விற்பனை செய்யப்படும். ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் இணைந்து மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஈட்டும் வகையில் முகவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

டிரைவர்கள் ஆதார் நகல், வாகன பதிவு சான்று நகல் வழங்க வேண்டும். விபரங்கள் 04546 -290776 போனில் பெறலாம் என ஆவின் தலைவர் ராஜா தெரிவித்தார்.

தி.மு.க.,நிர்வாகி கைது

தேவதானப்பட்டி:- பெரியகுளம் டி.எஸ்.பி. ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் குருவெங்கடேஷ் தேவதானப்பட்டி முருகமலை ரோட்டில் ரோந்து சென்றனர் . அங்குள்ள சுடுகாட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 300 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தேவதானப்பட்டி தி.மு.க., நகர பொறுப்பாளர் திலகர் ராஜா 40, இ. புதுப்பட்டி முருகன் 45, கைது செய்தனர்.

கல்வி உபகரணங்கள் வழங்கல்

குமுளி:- வண்டிப்பெரியார் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி துவங்காத நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகின்றன.இவர்களுக்குத் தேவையான நோட்டு, பேனா, பென்சில் கல்வி உபகரணங்களை கிரீன் வேல்டு டிரஸ்ட் வழங்கியது. இதன் தலைவர் ஜான்பீட்டர் தலைமையில், வண்டிப்பெரியார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனில்குமார் வழங்கி துவக்கி வைத்தார்.

வரதட்சணை வழக்கு

ஆண்டிபட்டி: கொண்டமநாயக்கன்பட்டி லோகநாதன் மகள் சுபாதேவி 31, பெரியகுளம் கீழகாமக்காபட்டியை சேர்ந்த ரவிசந்திரன் மகன் வினோத் 36,க்கும், இரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. வரதட்சணையாக 36 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொடுத்துள்ளனர். வினோத் சில தினங்களாக மனைவியை துன்புறுத்தி மேலும் 10 பவுன் நகை வாங்கி வர வற்புறுத்தியுள்ளனர்.

ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார், கணவர் வினோத், மாமனார் ரவிச்சந்திரன், மாமியார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்

இருவர் கைது

தேனி:- பூதிப்புரம் கலைமகள் நர்சரி பள்ளி உரிமையாளர் குருவிஜய் 26. பள்ளியில் இருந்த புரஜெக்டர், ஹோம் தியேட்டர் உள்ளிட்ட ரூ.80 ஆயிரம் மதிப்பிலான மின் சாதனங்களை திருடு போனது. பழனிச்செட்டிபட்டி போலீசார் வாழையாத்துப்பட்டி விக்னேஷ் 19, மஞ்சிநாயக்கன்பட்டி கோகுலகிருஷ்ணன் 22ஐ கைது செய்தனர். இவர்களிடம் இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மின்சாதனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

கடைகளுக்கு அபராதம்

தேனி: - நேற்று விதிமீறி, இறைச்சிக் கடைகளில் விற்பனை செய்தனர். சிலர் சைக்கிள்களில் டீ விற்பனை செய்தனர். இவர்கள் 11 பேருக்கு நகராட்சி ரூ.3100 அபராதம் விதித்தனர். ஊரடங்கு விதிமீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, நகராட்சி கமிஷனர் நாகராஜன் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X