தமிழ்நாடு

கூடி கும்மியடித்து, கொரோனாவை வாங்கும் மக்கள் அரசு அதிகாரிகள் எங்கே

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

திண்டுக்கல்: நகர்ப்புறங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மாவட்ட நிர்வாகம் காவல் துறை தீவிரப்படுத்தினாலும், கிராமப்புறங்களில் சமூக இடைவெளியே இல்லாமல் நடந்து கொள்கின்றனர். கிராமப்புறங்களிலும் கொரோனா பரவத்துவங்கிய நிலையில் பொதுமக்கள் அலட்சியமாக செயல்படுவது பாதிப்பை அதிகரிக்கவே செய்யும்.

மாவட்டத்தில் கொரோனா பரவல் தினமும் அதிகரித்து வருகிறது. இதுவரை 2000 க்கும் மேற்பட்டோர் பாதித்துள்ளனர். அரசு விழிப்புணர்வு செய்தாலும் பொதுமக்கள் அலட்சியமாக உள்ளனர். வணிக வளாகங்கள், மார்கெட்டுகளில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்காகவே ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்தால், சனிக்கிழமையே இறைச்சி, மீன்கடைகளில் கூடி கும்மியடித்து, கொரோனாவையும் வாங்கி செல்கின்றனர்.

திண்டுக்கல் நகர் பகுதிகளில் கடும் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையினரும் தீவிரப்படுத்தினாலும், கிராமப்புறங்களில் சமூக இடைவெளியே இல்லாமல் நடந்து கொள்கின்றனர். ரேஷன் கடையில் முண்டியடித்துக் கொண்டு பொதுமக்கள் பொருட்களை வாங்கி செல்கின்றனர். அங்கு பணியாற்றும் அரசு ஊழியர்களும் இதனை கண்டு கொள்வதில்லை. அதிகாரிகள், மக்கள் என யாருமே முகக்கவசம் அணியவில்லை. நகர் பகுதிகளை விட கிராமப்புறங்களிலும் கொரோனா பரவத்துவங்கிய நிலையில் பொதுமக்கள் அலட்சியமாக செயல்படுவது பாதிப்பை அதிகரிக்கவே செய்யும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X