பொது செய்தி

தமிழ்நாடு

வெயிலில் தவிக்கும் சந்தை வியாபாரிகள்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

வடமதுரை:வடமதுரையில் சவுந்தரராஜப் பெருமாள் கோயிலையொட்டி ஹிந்து அறநிலையத்துறையினரின் வாரச்சந்தை உள்ளது. கொரோனா தொற்று பிரச்னையால் கடந்த மார்ச் முதல் சந்தை மூடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் வாரச்சந்தைகள் அனைத்தும் மூடிக் கிடப்பதால் வருமானம் இன்றி தவிக்கும் உள்ளூர் வியாபாரிகள், அந்தந்த நாட்களில் அவரவர் ஊர்களில் ரோட்டோரம் கடை விரிக்கின்றனர்.

வடமதுரையிலும் சில வியாபாரிகள் சனிக்கிழமைகளில் திண்டுக்கல் ரோட்டோரம் வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். இவர்கள் ரோட்டோரம் விபத்து ஆபத்துடன் அமர்ந்துள்ளனர். மேலும் மேற்கூரை இன்றி அமர்ந்திருப்பதால் வெயிலில் வாடியும், மழையில் நனைந்தும் பரிதவிக்கின்றனர்.

குறைந்த எண்ணிக்கையில் வியாபாரம் செய்யும் இவர்களுக்கு உள்ளூர் வாரச்சந்தைகளில் சமூக இடைவெளி, முகக்கவசம் பின்பற்றுதலுடன் அனுமதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம்.சிவக்குமார்: தனியார் தொழில்துறையில் பணியாற்றி 'கொரோனா'வால் வேலை இழந்ததால் சந்தை வியாபாரத்திற்காக கடை அமைக்கிறேன். கிராமங்களுக்கு இருசக்க ர வாகனங்களில் செல்லும்போது தொற்று அச்சம் காரணமாக மக்கள் தெருக்களில் நுழையவதற்கு அனுமதி மறுக்கின்றனர். இங்குள்ள சந்தை வளாகத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வியாபாரிகளை மட்டும் அனுமதிக்கும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும்.

எஸ்.சுமதி:வெளியூர் நுாற்பாலையில் பணிபுரிந்து கொரோனா பாதிப்பால் வேலைவாய்ப்பை இழந்துள்ளேன். குடும்பத்தை காப்பாற்ற சந்தை கூடும் நாளில் இங்கு வியாபாரம் செய்கிறேன். வெயில், மழை நேரங்களில் அதிக சிரமம் உள்ளது. ஒருபுறம் சந்தை வளாகம் பயனற்று கிடக்கும் நிலையில், நெரிசல் மிகுந்த ரோட்டில் ஆபத்தாக வியாபாரம் செய்கிறோம். மக்களையும், வியாபாரிகளையும் பாதுகாக்கும் வகையில் கட்டுப்பாடுகளுடன் சந்தை வளாகத்தை திறக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X