சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நத்தத்தில் கட்டுக்குள் வருமா கொரோனா

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

நத்தம்:நத்தத்தில் ஊரடங்கால் கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

நத்தம் பகுதியில் ஆரம்பத்தில் பாதிப்பு எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. ஊரடங்கு தளர்வையடுத்து மதுரை சென்று வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு வைரஸ் தொற்று அதிகம் பரவத் துவங்கியது. பரளியில் முகாம் அமைத்து மதுரையில் இருந்து வருவோரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது. இதுவரை 250க்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதித்துள்ளனர். சிகிச்சை பலனின்றி 8 பேர் பலியாகியுள்ளனர்.இதையடுத்து ஜூலை 11 முதல் 20 வரை நத்தம் வட்டாரத்தில் மட்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதன் பின் 2 நாட்களாக தலா ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முழு ஊரடங்கால் நத்தம் பகுதியில் பரவல் கட்டுக்குள் வரும் என சுகாதாரத் துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X