கழிப்பறையாகும் ரயில் தண்டவாளம்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:ஊரடங்கால் ரயில், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இருந்தும் வழக்கம் போல் ரயில்வே ஸ்டேஷன், தண்டாவளம் உள்ளிட்டவை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அய்யலூரில் ரயில்வே தடத்தை பொதுமக்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

இதனால் தண்டவாளத்தை கடப்பவர்கள் விபத்துக்குள்ளாவதுடன், தண்டாளவங்களில் துரு உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க, அய்யலூர் ரயில்வே ஸ்டேஷன் சார்பில் கலெக்டர் விஜயலட்சுமிக்கு கடிதம் அனுப்பினர்.அதில்,'தண்டவாளம் பராமரிப்பு, செடிகளை அகற்றுதல், விரிசல்களை சரிசெய்தல் போன்ற பணிகளை ஊழியர்கள் மேற்கொள்கின்றனர்.

தண்டவாளம் அருகே வசிக்கும் மக்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் பணி செய்ய சிரமாக உள்ளது. இதை தடுக்க வேண்டும்' என, கூறியிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X