பொது செய்தி

தமிழ்நாடு

முதல் முறையாக நல்லதங்காள் அணைக்கு நீர்வரத்து விவசாயிகள் மகிழ்ச்சி

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

ஒட்டன்சத்திரம்:கொத்தையம் நல்லதங்காள் அணைக்கட்டுக்கு முதல் முறையாக நீர்வரத்து வந்துள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒட்டன்சத்திரத்தில் தொப்பம்பட்டி ஒன்றியம் ஒரு வறட்சி பகுதியாகும். இங்கு கிணற்று பாசனத்தை நம்பியே விவசாயம் நடக்கிறது. இப்பகுதியில் சிறு குளங்கள், கசிவு நீர் குட்டைகள் மட்டுமே உள்ளன. மழை பெய்து நல்லதங்காள் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தடுப்பணைகள் இல்லாததால் தண்ணீர் கடலுக்கு சென்று வீணாயின.

இதை தடுக்க, 2011 ல் அணைக்கட்டு கட்ட திட்டமிட்டனர். பிறகு, ஆட்சி மாற்றத்தால் 2017 ல் அணைக்கட்டு கட்டப்பட்டது. சில நாட்களாக பலத்த மழை பெய்ததால், நல்லதங்காள் அணைக்கட்டுக்கு முதல் முறையாக நீர் வரத்து வந்துள்ளது. அணையில் 36.10 மி.கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். ஐம்பதிற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வசதி கிடைப்பதுடன், 804 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்

சின்னச்சாமி பாலப்பன்பட்டி: அணைக்கட்டு திட்டம் விவசாயிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். தற்போது பாதியளவிற்கு நீர் நிரம்பி உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இப்பகுதியில் கால்வாய் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போர்வெல்லில் தண்ணீர்

ராஜ்குமார், கொத்தையம்: மழை பெய்யும் போது தண்ணீரை தேக்க முடியாமல் தவித்து வந்தோம். அணைக்கட்டு திட்டத்தால் முதல் முறையாக அணைக்கு தண்ணீர் வந்துள்ளது. இதனால் குடிநீருக்கு பிரச்னை இருக்காது. போர்வெல்களுக்கும் தண்ணீர் வரத்து ஏற்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X