பிரச்னை கிளப்பும் புத்தகம்

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement

வெளியுறவுத்துறை அமைச்சராக இருப்பவர், தமிழகத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர். அமைதியாக தன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும் இவர் மீது, பிரதமர் மோடிக்கு அதிக நம்பிக்கை.அமைச்சர் ஆவதற்கு முன், ஐ.எப்.எஸ்., அதிகாரியாக, வெளியுறவுத்துறை செயலராகவும் பணியாற்றியவர், இவர். தன் பல ஆண்டுகால அனுபவங்களை, புத்தகமாக எழுதி உள்ளார். இந்த புத்தகம் விரைவில் வெளியாக உள்ளதாம்.



latest tamil news



ஜனாதிபதி வெளியிட, பிரதமர் மோடி முதல் புத்தகத்தை பெற்றுக் கொள்வாராம். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.இந்த புத்தகம் ஆங்கிலத்தில் இருந்தாலும், இதனுடைய தமிழ் மொழிபெயர்ப்பும் வெளியாக இருக்கிறது. இந்த புத்தகத்தில், இந்தியா - -இலங்கை தொடர்புகள்; இலங்கையில் நடைபெற்ற பிரச்னைகள்; அதை எப்படி இந்தியா கையாண்டது; அரசியல்வாதிகள் எப்படி நடந்து கொண்டனர் என, பல விவரங்களை, வெளிப்படையாக எழுதியுள்ளாராம், ஜெய்சங்கர். இது காங்கிரசுக்கு தமிழகத்தில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தும் என, ஜெய்சங்கருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.


latest tamil news



குறிப்பாக, காங்., தலைமை இலங்கை விஷயத்தில் போட்ட இரட்டை வேடம் வெளியாகும் என்கின்றனர். இன்னொரு பக்கம், 'தி.மு.க.,விற்கு இதனால் பிரச்னைகள் வரும்; இந்த புத்தகம் வெளியானதும் தமிழக அரசியலில் மாற்றங்கள் நடந்தாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை' என்கின்றனர், விஷயம் தெரிந்தவர்கள்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rsudarsan lic - mumbai,இந்தியா
28-ஜூலை-202018:02:56 IST Report Abuse
rsudarsan lic இரு கழகங்களும் தூக்கி சாப்பிட ஒரு கன்னட புயல் தயாராகி வருகிறது தெரியுமில்லையா? வள்ளுவர் சொன்ன படி செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமையானும் கெடும். குற்றவாளிகளை தண்டிக்காமல் விட்ட தமிழகம் பல விதங்களில் கெடஉள்ளது. இது இன்னும் கால் நூற்றாண்டுக்கு தொடரும்.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
27-ஜூலை-202015:55:06 IST Report Abuse
Anand ராஜபக்ஷேவிடம் பல்லிளித்து பரிசு பொருட்கள் பெற்றுவந்த நபர்கள் தான் இரட்டை வேடம் பூண்டவர்கள். அதற்கு பதில் சொல்ல இப்போது காலம் கனிந்துள்ளது.
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
27-ஜூலை-202015:25:32 IST Report Abuse
M.COM.N.K.K. ஒருவர் சுய சரிதை எழுதினால் உள்ளதை உள்ளபடிதானே எழுதமுடியும்.அதை கற்பனையாக எழுத்தமுடியாதே அந்த புத்தகம் எங்கள் கையிற்கு வந்ததும் படித்துப்பார்த்து விவரம் சொல்கிறோம் அதுவரை அனைவரும் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். ஜெய்சங்கர் அவர்கள் மேல் எங்களுக்கு முழு நம்பிக்கை உண்டு அவர் நூற்றுக்கு நூறு சரியாகவே அவர் புத்தகத்தை எழுதியிருப்பார் யாருக்கும் சந்தேகமே தேவை இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X