அழகிரி மீது ராகுலுக்கு நம்பிக்கையில்லை?

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (37)
Share
Advertisement

சென்னையில் தமிழக காங்கிரஸ் அலுவலகமான சத்திய மூர்த்தி பவன் மற்றும் தேனாம்பேட்டையில் கட்சிக்கு சொந்தமான இடம் தொடர்பாக பரபரப்பான செய்திகள் அடிபடுகின்றன. இந்த இடங்களில், மாபெரும் வளாகம் கட்ட, ராகுல் ஆசைப்படுகிறார் என, சொல்லப்படுகிறது.

இந்த விவகாரத்தில் ஊழல் நடக்கிறது என்கின்றனர், சில காங்கிரசார். சமீபத்தில் இது தொடர்பாக, ஒரு பிரபல ஆடிட்டர், 'டுவிட்' செய்து, பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு தமிழக காங்., தலைவர், மறுப்பும் தெரிவித்தார்.



latest tamil news



இந்த விஷயம், ராகுலை பெரிதும் பாதித்துள்ளதாம். காங்கிரசைச் சேர்ந்தவரும், தமிழக காங்., டிரஸ்ட்டின் அங்கத்தினருமான ஒருவர் தான், அந்த ஆடிட்டரைச் சந்தித்து, உள் விவகாரங்களைப் போட்டுக் கொடுத்துவிட்டார் என, சந்தேகிப்பதோடு, அவர் மீது கோபமாகவும் இருக்கிறாராம் ராகுல்.


latest tamil news



'சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் எப்படி வெளியானது; இதன் பின்னணியில் இருப்பது யார்' என்பது குறித்து விசாரிக்குமாறு, தன் அந்தரங்க ஆலோசகரான, கனிஷ்க் சிங்கிற்கு உத்தரவிட்டுள்ளாராம், ராகுல். இதிலிருந்து தமிழக காங்., தலைவர் அழகிரி மீது, ராகுலுக்கு நம்பிக்கையில்லை என தெரிகிறது என பேச ஆரம்பித்துவிட்டது, அழகிரியின் எதிர் கோஷ்டி.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
27-ஜூலை-202021:36:21 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN மாண்பமை ராகுல்.... திரு.அழகிரியைவிட மூத்தவரோ ............யார் யாரை நம்புவது ...சேரிடம்அரிந்து சேர் எனசும்மா சொல்லவில்லை பெரியோர்.
Rate this:
Cancel
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
27-ஜூலை-202016:23:55 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா அழகிரியை மாத்துங்க ராகுல், கூட்டணி தர்மத்தை காப்பாத்துங்க. எங்க தலீவருக்கு அந்த பெயரை கேட்டாலே நடுங்குது...வேர்த்து ஊத்துது...சும்மாவே உளறல் பேர்வழி.. இதுல இது வேற டென்ஷன்.
Rate this:
Cancel
Hari - chennai,இந்தியா
27-ஜூலை-202015:47:03 IST Report Abuse
Hari .இதுக்கு சுடலை கம்யூனிஸ்டும் உடந்தை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X