சானிடைசர் கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

தினமும் பரபரப்பான செய்தியை தந்து கொண்டிருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தின் கவர்னராக இருப்பவர், கல்ராஜ் மிஸ்ரா. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். மோடி அரசில், அமைச்சராக இருந்தவர். அதிக வயதாகி விட்டதால், தற்போதைய மத்திய அரசில் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. அதனால், இவரை கவர்னராக்கி விட்டனர்.



latest tamil news



மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நெருக்கமானவர் என்பதால், கல்ராஜ் மிஸ்ரா மீது மோடிக்கு தனி மரியாதை. ராஜஸ்தான் முதல்வர் கெலாட், இப்போது, கல்ராஜ் மிஸ்ராவை அடிக்கடி சந்தித்து வருகிறார். எப்போது முதல்வர் வந்தாலும், அவர் கையில், கவர்னரே சானிடைசர் தெளிக்கிறார். மற்ற கவர்னர்கள் போல் தாமதம் செய்யாமல், முதல்வர் எப்போது நேரம் கேட்டாலும், உடனே ஒப்புக் கொண்டு சந்திக்கிறார். தனக்கு எதிராக கெலாட் பேசி வந்தாலும், விரோதம் பாராட்டாமல், அவரை சந்திக்கிறார், கல்ராஜ் மிஸ்ரா.


latest tamil news



இவருக்கு எப்போதும் கோபமே வராதாம். வாஜ்பாயுடன் நெருக்கமாக இருந்ததால், அவரைப் போலவே எப்போதும் சிரித்த முகத்துடனே காணப்படுகிறார். காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கவர்னர் மாளிகைக்கு வந்து, கல்ராஜ் மிஸ்ராவுக்கு எதிராக கோஷமிட்ட போதும், கோபம் இல்லாமல் அனைவரையும் சந்தித்தார்.இவருடைய மனதில் என்ன ஓடுகிறது என்பதை, இவரது முகம் காட்டிக் கொடுக்காது. அடுத்தாக என்ன செய்யப்போகிறார் என்பதை, வெளியே காட்டிக் கொள்ள மாட்டார். பல முறை, முதல்வர் அசோக் கெலாட் இவரைச் சந்தித்தாலும், கவர்னர் என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள முடியவில்லை.

ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும், கவர்னரே சானிடைசரை தெளித்து வரவேற்கும் போது, ஒன்னுமே புரியவில்லை என, குழம்பி போகிறார் முதல்வர். முதல்வர், கவர்னர் இருவருமே அரசியலில் கரைகண்ட மூத்த தலைவர்கள் என்பதால், யாரிடம் என்ன வியூகம் என்பது, சக அரசியல்வாதிகளுக்கு புதிராகவே தொடர்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-ஜூலை-202016:09:09 IST Report Abuse
தமிழ்வேல் இவரது வயதிற்கு சர்ஜிக்கல் மாஸ்க் அணிவது அவருக்கு நல்லது. இவர் அணிந்திருக்கும் மாஸ்க் வைரஸ் லிருந்து இவரைக் காப்பாற்றுமா என்பதை உறுதிசெய்துகொள்வது நல்லது.
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-ஜூலை-202016:04:23 IST Report Abuse
தமிழ்வேல் எதற்கு இந்த செய்தி ?
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
27-ஜூலை-202012:45:10 IST Report Abuse
Nathan செய்திக்கும் மாலிக் காமெண்டுக்கும் என்ன சம்பந்தம்.
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-ஜூலை-202016:09:20 IST Report Abuse
தமிழ்வேல் இவர் வயதிற்கு, உண்மையான முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைப்பது நல்லது....
Rate this:
Rajan - Alloliya,இந்தியா
27-ஜூலை-202016:51:08 IST Report Abuse
Rajanyarukkum puriyathu,yen avarukke puriyathu...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X