சச்சினின் சட்ட நண்பர்

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

டில்லியில், இரண்டு வாரமாக அரசியல் பரபரப்பை அதிக மாக்கிக் கொண்டிருப்பது, ராஜ்ஸ்தான் விவகாரம் தான். மாறி மாறி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று இந்த பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது; இன்னொரு பக்கம் கவர்னர் மாளிகையில் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் தர்ணா என, உச்சகட்ட அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. மக்களை பாதிக்கும் பிரச்னைகளை அனைவரும் மறந்துவிட்டு, அரசியல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர்.



latest tamil news



ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சச்சின் பைலட்டிற்கு, சட்ட ரீதியாக நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்க உதவிக் கொண்டிருப்பவர், டில்லி தமிழ் வழக்கறிஞர் ஹரிஹரன்; டில்லி தமிழ் பள்ளியில் படித்து, மிகவும் பிரபலமான செயின்ட் ஸ்டீபன் கல்லுாரியில் படித்தவர். இந்த கல்லுாரியில் இடம் கிடைப்பது மிகவும் கடினம். அதைத் தொடர்ந்து, டில்லியிலேயே சட்டபடிப்பையும் முடித்தவர். ராஜஸ்தான் தொடர்பான வழக்குகளில், உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான இவருக்கு, துணை முதல்வரக இருந்த சச்சினுடன் தொடர்பு ஏற்பட்டு, பின் நட்பு நெருக்கமானது.


latest tamil news



இப்போது சச்சின் பைலட்டின் வழக்குகளை ஹரிஹரன் கவனித்து வருகிறார்.சீனியர் வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் ஹரீஷ் சால்வே ஆகியோரை அணுகி, சச்சினுக்கு வாதாடுமாறு ஏற்பாடு செய்தவர், இந்த ஹரிஹரன். இவருடைய முயற்சியாலும், சீனியர் வழக்கறிஞர்களின் வாதாடும் திறமையாலும், உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் இதுவரை சச்சினுக்கு ஆதரவாக தீர்ப்புகள் வந்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s vinayak - chennai,இந்தியா
28-ஜூலை-202009:00:08 IST Report Abuse
s vinayak "சீனியர் வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் "ஹரீஷ் சால்வே ஆகியோரை அணுகி, சச்சினுக்கு வாதாடுமாறு ஏற்பாடு செய்தவர்" . தமிழர்கள் ஏற்பாடுகளை சிறப்பாக செய்வார்கள்.
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
27-ஜூலை-202012:14:54 IST Report Abuse
ponssasi வாதாடும் திறமை வைத்துதான் தீர்ப்பு, நியாயம் பக்கம் இருக்க வாய்ப்பு இல்லை
Rate this:
Cancel
Rajan - Alloliya,இந்தியா
27-ஜூலை-202010:05:55 IST Report Abuse
Rajan வந்த நாட்டவர்கள் தமிழனை சார்ந்து உள்ளார்கள் .தமிழர்கள் எங்கும் கோலோச்சுவது மகிழ்ச்சி அளிக்கிறது .
Rate this:
Rajan - Alloliya,இந்தியா
27-ஜூலை-202011:36:10 IST Report Abuse
Rajanதூய தமிழன் சூசை வட நாட்டவர் ஆரிய ப்ராஹ்மண கிஷோர் சார்ந்து...
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
27-ஜூலை-202013:57:50 IST Report Abuse
 Muruga Velதமிழர்கள் எங்கும் கோலோச்சுவது ...................
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
27-ஜூலை-202014:02:23 IST Report Abuse
s.rajagopalan'நம்ம' ராகு லார் பிரதமர் , என்று கனவு கண்டு துவண்ட ஸ்டாலினுக்கு மீண்டும் சோதனை. அவரின் நண்பரை கவிழ்க்க சச்சினுக்கு ஒரு ஆரியன் கிளம்பிட்டானே ? ராகுலும் தன்னை ஆரியன் என்று சொல்லிவிட்டார்....இனி என்ன ஆகுமோ ? இ பி எஸ் சிரிப்பார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X