சச்சினின் சட்ட நண்பர் | Sachin Pilot's legal adviser is Tamil advocate Hariharan | Dinamalar

சச்சினின் சட்ட நண்பர்

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (12)
Share
டில்லியில், இரண்டு வாரமாக அரசியல் பரபரப்பை அதிக மாக்கிக் கொண்டிருப்பது, ராஜ்ஸ்தான் விவகாரம் தான். மாறி மாறி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று இந்த பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது; இன்னொரு பக்கம் கவர்னர் மாளிகையில் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் தர்ணா என, உச்சகட்ட அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. மக்களை பாதிக்கும் பிரச்னைகளை அனைவரும் மறந்துவிட்டு, அரசியல் விளையாட்டில்

இந்த செய்தியை கேட்க

டில்லியில், இரண்டு வாரமாக அரசியல் பரபரப்பை அதிக மாக்கிக் கொண்டிருப்பது, ராஜ்ஸ்தான் விவகாரம் தான். மாறி மாறி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று இந்த பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது; இன்னொரு பக்கம் கவர்னர் மாளிகையில் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் தர்ணா என, உச்சகட்ட அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. மக்களை பாதிக்கும் பிரச்னைகளை அனைவரும் மறந்துவிட்டு, அரசியல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர்.latest tamil newsராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சச்சின் பைலட்டிற்கு, சட்ட ரீதியாக நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்க உதவிக் கொண்டிருப்பவர், டில்லி தமிழ் வழக்கறிஞர் ஹரிஹரன்; டில்லி தமிழ் பள்ளியில் படித்து, மிகவும் பிரபலமான செயின்ட் ஸ்டீபன் கல்லுாரியில் படித்தவர். இந்த கல்லுாரியில் இடம் கிடைப்பது மிகவும் கடினம். அதைத் தொடர்ந்து, டில்லியிலேயே சட்டபடிப்பையும் முடித்தவர். ராஜஸ்தான் தொடர்பான வழக்குகளில், உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான இவருக்கு, துணை முதல்வரக இருந்த சச்சினுடன் தொடர்பு ஏற்பட்டு, பின் நட்பு நெருக்கமானது.


latest tamil newsஇப்போது சச்சின் பைலட்டின் வழக்குகளை ஹரிஹரன் கவனித்து வருகிறார்.சீனியர் வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் ஹரீஷ் சால்வே ஆகியோரை அணுகி, சச்சினுக்கு வாதாடுமாறு ஏற்பாடு செய்தவர், இந்த ஹரிஹரன். இவருடைய முயற்சியாலும், சீனியர் வழக்கறிஞர்களின் வாதாடும் திறமையாலும், உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் இதுவரை சச்சினுக்கு ஆதரவாக தீர்ப்புகள் வந்துள்ளன.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X