புதுச்சேரி சட்டசபை 2 நாட்கள் மூடல் புதுச்சேரி சட்டசபை 2 நாட்கள் மூடல்| Dinamalar

இந்தியா

புதுச்சேரி சட்டசபை 2 நாட்கள் மூடல் புதுச்சேரி சட்டசபை 2 நாட்கள் மூடல்

Added : ஜூலை 27, 2020
Share

புதுச்சேரி; எம்.எல்,ஏ.,வை தொடர்ந்து இரண்டு பாதுகாவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், புதுச்சேரிசட்டசபை இன்று முதல் 48 மணி நேரத்திற்கு மூடப்படுகிறது.புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடரில் மூன்று நாட்கள் பங்கேற்ற என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., ஜெயபாலுக்குகொரோனா தொற்று ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சட்டசபை வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மைய மண்டபம் பூட்டப்பட்டது.அத்துடன் நேற்றுவரை நடக்க இருந்த பட்ஜெட் கூட்டத் தொடரை, அவசரமாக நேற்று முன்தினமே மரத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. இன்று முதல் முதல்வர், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள், பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு இருந்தது.இந்நிலையில், சட்டசபையில் பணியாற்றும் இரண்டு பாதுகாவலர்களுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து புதுச்சேரிசட்டசபை இன்று முதல் 48 மணி நேரத்திற்கு இரண்டு நாட்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் எதிரொலியாக நேற்று சட்டசபை பாதுகாவலர்கள் ஓய்வறை, சட்டசபை நுழைவு வாயில் கேட்டுகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. சட்டசபை சுற்றிலும் மீண்டும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.மொத்தம் 6 சட்டசபை பாதுகாவலர்கள் பணியாற்றியதில், இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் மூலம் தங்களுக்கும் தொற்று ஏற்பட்டிருக்கும் என சக பாதுகாவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பீதியில் உள்ளனர். ஆதலால் தங்களையும் தனிமைப்படுத்திக் கொள்ள சபாநாயகர் மற்றும் முதல்வரிடம் கோரிக்கை வைக்க பாதுகாவலர்கள் முடிவு செய்துள்ளனர்.எம்.எல்.ஏ.,ஜெயபாலுக்கு ஏற்பட்ட தொற்றினால் நேற்று சட்டசபை மூடப்பட்டு இருந்தது. சட்டசபை பாதுகாவலர்களுக்கு ஏற்பட்ட தொற்றினால் மேலும் இரண்டு நாட்கள் மூடப்படுவதால் வரும் 29 ம் தேதி சட்டசபை திறக்கப்படுகிறது. அன்றைய தினம் ஜெயபால் எம்.எல்.ஏ.,வுக்கு அருகில் அமர்ந்திருந்த முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.,க்கள் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X