மஹா., அரசை முடிந்தால் கவிழ்க்கவும்; பா.ஜ.,வுக்கு உத்தவ் சவால்

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (39)
Share
Advertisement
Uddhav Thackeray, BJP, Maharashtra, Maharashtra government, Chief Minister uddhav, Bharatiya Janata Party,பாஜ, உத்தவ், உத்தவ் தாக்கரே

மும்பை: மஹா., கூட்டணி அரசை முடிந்தால் கவிழ்த்து காட்டுங்கள் என பா.ஜ.,வுக்கு அம்மாநில முதல்வரும் சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே சவால் விடுத்துள்ளார்.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் அவர் அளித்துள்ள பேட்டி: இந்தியாவில் சீன நிறுவனங்கள் தொழில் செய்யலாமா, வேண்டாமா என்பது குறித்த தேசிய கொள்கை முடிவை பிரதமர் எடுக்க வேண்டும். மஹா., அரசு, சீனாவுடனான ஒப்பந்தங்களை தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளது. சீன அதிபரை இந்தியா அழைக்கும் நிலை ஏற்பட்டால், அந்நாட்டுடன் வணிக வாய்ப்புகள் தொடரும்.


latest tamil news



ஏழைகளின் வாகனமாக மூன்று சக்கர ஆட்டோ ரிக்ஷா போன்றது எனது அரசு. அதனை கட்டுப்பாட்டுடன் ஓட்டும் கைபிடி என்னிடம் உள்ளது. கூட்டணியில் உள்ள காங்., தேசியவாத காங்., கட்சிகள் ஆட்டோவின் பின்புறம் அமர்ந்துள்ளன. தேவைப்படும் போது, கூட்டணி கட்சி தலைவர்களுடன் நான் தொலைபேசியில் பேசி விடுகிறேன். எங்களுக்குள் சிறந்த ஒருங்கிணைப்பு உள்ளது. அரசும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

எங்கள் அரசு ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராக ஆட்சி அமைத்துள்ளது என விமர்சிக்கிறீர்கள். அரசை கவிழப்பது மட்டும் ஜனநாயகமா? எதிர்கட்சிகளின் கைகளில் எனது அரசின் எதிர்காலம் இல்லை. முடிந்தால், எங்கள் அரசை இப்போதே கவிழ்த்து காட்டுங்கள் பார்க்கலாம்?. இவ்வாறு எதிர்கட்சியான பா.ஜ.,வுக்கு உத்தவ் சவால் விடுத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
27-ஜூலை-202019:21:51 IST Report Abuse
Anand சிவசேனா கட்சி "கான் கிராஸ்" சேனாவாகி வெகுநாட்கள் ஆகிவிட்டது. எனவே இப்படி கூவினால் தான் பதவியில் இருக்கமுடியும். இல்லாவிட்டால் இத்தாலியா மாபியாக்கள் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
27-ஜூலை-202019:16:34 IST Report Abuse
Darmavan இவன் ஒரு துரோகி இவன் யாருடன் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்தித்தான் BJP ஊட்டில்தான் இவன் வென்றான்.சந்தர்ப்ப வாதி எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு துரோகம் செய்கிறான் வரும் தேர்தலில் இவன் நிலை தெரியும்.
Rate this:
Cancel
sivakumar - chennai,இந்தியா
27-ஜூலை-202018:55:30 IST Report Abuse
sivakumar பால் தாக்கரே முதல்வராக ஆக வேண்டும் என்று எப்போதும் நினைத்ததில்லை, நீங்கள் சந்தர்ப்பவாதத்தால் முதல்வராகியுள்ளீர்கள்.... பால் தாக்கரே வின் சாணக்கியத்தனம் உங்களிடம் அறவே இல்லை 🤸🤸🤸
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X