இந்தியா

மாடுகள் திருட்டு ஆசாமிகளுக்கு வலை

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

புதுச்சேரி; நகர பகுதியில் மாடுகளை திருடி சென்ற கும்பல் மீது சி.சி.டி.வி., ஆதாரத்துடன் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி, சாரம் கவிக்குயில் நகரை சேர்ந்தவர் யுவராஜ்,50. இவர் 10 க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகின்றார். இரவில் மாடுகளை வீட்டிற்கு வெளியே கட்டி வைப்பது வழக்கம்.இந்நிலையில் கடந்த மாதம் இவரது கறவைமாடு ஒன்று காணாமல் போனது. இதேபோன்று, ரெயின்போ நகர் பகுதிகளிலும் பல கறவை மாடுகள், கன்று குட்டிகள் காணாமல் போனது. கடந்த 17ம் தேதி சாரம் பகுதியில் மேலும் ஒரு கறவை மாடுகன்றுடன் காணாமல் போனது.இது குறித்து போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனையடுத்து, யுவராஜ் மாடுகள் காணாமல் போன பகுதியில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை வாங்கி பார்த்தார். அதில், பைக்கில் கயிற்றோடு வரும் இருவர் கறவை மாடு மற்றும் கன்று குட்டியை பிடித்து இழுத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.இதனையடுத்து அந்த சி.சி.டி.வி., ஆதாரத்துடன் டி.நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், மாடுதிருடர்களை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X