இந்தியா

உருளையன்பேட்டை தொகுதியில் கந்த சஷ்டி புத்தகம் வழங்கல்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

புதுச்சேரி; உருளையன்பேட்டை தொகுதியில் வீடு வீடாக சென்று கந்த சஷ்டி கவசம் புத்தகத்தை பா.ஜ.,வினர் வழங்கினர்.உலக மக்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து காப்பாற்ற வேண்டியும், சஷ்டி விரதத்தை முன்னிட்டும், உருளையன்பேட்டை தொகுதி பா.ஜ., சார்பில் கந்தசஷ்டி கவச புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ராஜிவ்காந்தி நகரில் உள்ள முருகர் கோவில் அருகே துவங்கிய இந்த நிகழ்ச்சிக்கு உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளர் மகேஷ் தலைமை தாங்கினார். புதுச்சேரி நகர மாவட்ட தலைவர் வக்கீல் அசோக்பாபு முன்னிலை வகித்தார். உப்பளம் தொகுதி பொறுப்பாளர் கோபி, உருளையன்பேட்டை தொகுதி தலைவர் தனசேகர், பொதுச்செயலர் மணி, பாரதி, சக்திவேல், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முதல்கட்டமாக, வ.உ.சி., வீதியில் வீடு வீடாக சென்று கந்தசஷ்டி கவசம் புத்தகம் வழங்கப்பட்டது. புத்தகத்துடன் முக கவசமும் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X