இந்தியா

கொரோனா தொற்றால் ரத்ததானம் குறைந்தது

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

புதுச்சேரி; கொரோனா தொற்று அச்சம் காரணமாக ரத்ததானம் குறைந்துள்ளதால், மருத்துவமனைகளில் ரத்தம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.கொரோனா தொற்று மக்களை பல்வேறு வகைகளில் முடக்கம் செய்துள்ளது. அதனால் பலதரப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் ரத்ததானமும் குறைந்துள்ளது. இதனால் அறுவை சிகிச்சைகளுக்கு ரத்தம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் தன்னார்வலர்கள் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும் என்ற வேண்டுகோள் எழுந்துள்ளது.ரத்ததான கோரிக்கை தொடர்பாக ஜிப்மர் மருத்துவமனை ரத்த வங்கி செவிலியரின் வீடியோ பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.அதில் அவர் கூறியிருப்பதாவது:புதுச்சேரியில் பல்வேறு தன்னார்வலர்கள் அமைப்பு மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் ரத்த தான முகாமை நடத்துவது வழக்கம். இதன் மூலம் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கிக்கு அதிக அளவிலான ரத்தம் கிடைத்தது. அதனால், ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் ரத்தம் செலுத்தப்பட்டு வந்தது.இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் அவர்கள் மூலம் கிடைக்கப்பெறும் ரத்த தானம் தடைபட்டுள்ளது.மேலும் கொரோனா பயம் காரணமாக தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்ய முன்வரவில்லை. இதனால் ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் ரத்த இருப்பு குறைந்துள்ளது. ஆகவே தன்னார்வலர்கள் பொதுமக்கள் தானாக முன்வந்து ரத்த தானம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X