இந்தியா

கார்கில் நினைவு தினம் பொதுநல அமைப்பினர் அஞ்சலி

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

புதுச்சேரி;கார்கில் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள கார்கில் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.முன்னாள் ராணுவ வீரரான முன்னாள் எம்.எல்,ஏ., ஓம்சக்தி சேகர் கார்கில் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினார்.பா.ஜ., வினர் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் பொதுச்செயலர்கள் செல்வம், மோகன்குமார், நகர மாவட்ட தலைவர் அசோக்குமார், ஓ.பி.சி., அணி தலைவர் சிவக்குமார், சிறுபான்மை அணி தலைவர் விக்டர் விஜயராஜ், மகளிரணி தலைவர் ஜெயலட்சுமி, நகர மாவட்ட துணை தலைவர் பழனியாண்டி,செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கார்கில் நினைவு மரம்புதுச்சேரி ரயில் நிலைய வளாகத்தில் கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாக வைக்கப்பட்ட அரச மரத்திற்கு எம்.ஜி.ஆர். பொது நல சமூக பேரவை சார்பில் மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.இதில் ரயில் நிலைய அதிகாரி ராமச்சந்திரன், பேரவை தலைவர் சிவா, வக்கீல் ஜெயந்த், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X