இந்தியா

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி வவுச்சர் ஊழியர்கள் தற்கொலை மிரட்டல்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

புதுச்சேரி,; பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள், தினக்கூலி ஊழியருக்கான பணி ஆணை கேட்டு நேற்று இரவு 50 அடி உயர மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி பொதுப்பணித்துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் வவுச்சர் ஊழியர்கள் தினக்கூலி ஊழியருக்கான பணி ஆணை, நிலுவை ஊதியம் வழங்க வேண்டும். கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.நேற்று சுதேசி மில் எதிரே குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர். சப் கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்து கொட்டும் மழையில் போராட்டத்தை தொடர்ந்தனர்.அவர்களை, மாலை 5.00 மணிக்கு போலீசார் கைது செய்து, கோரிமேடு சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனர். பின்னர் போலீசார் அவர்களை கலைந்து செல்ல கூறினர். ஆனால் ஊழியர்கள் மறுத்துவிட்டனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். ஊழியர்கள் சிதறி ஓடினர்.அவர்களில் 75 பேர் கோரிமேட்டில் இருந்து மேட்டுப்பாளையம் தொழிற்போட்டைக்கு ஊர்வலமாக நடந்து சென்றனர். அங்கு அரசு ஐ.டி.ஐ., எதிரே உள்ள 50 அடி உயரம் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மீது ஏறிய 20 பேர், தினக்கூலி பணி ஆணை வழங்க வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர், எங்களை சமாதானம் செய்ய யாரேனும் டேங்க் மீது ஏறினால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.அதேநேரத்தில், கோரிமேடு சமுதாய நலக்கூடத்தில் சிறை வைக்கப்பட்ட ஊழியர் சங்க நிர்வாகிகளிடம்பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர், செயற்பொறியாளர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.அதனையொட்டி, இரவு 10.15 மணிக்கு சமுதாயக் கூடத்தில் சிறை வைக்கப்பட்டஊழியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அதனால் பெண் ஊழியர்கள் 50 பேர் வீடு திரும்பினர். சங்க நிர்வாகிகள்மற்றும் ஊழியர்கள்உள்ளிட்டோர், மேட்டுப்பாளையத்தில் நடைபெறும்போராட்டத்தில் பங்கேற்றனர்.இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருவதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X