இந்தியா

கார்கில் நினைவிடத்தில் கவர்னர்--முதல்வர் மரியாதை

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

புதுச்சேரி; கார்கில் நினைவு தினத்தையொட்டி கடற்கரை சாலையில் உள்ள கார்கில் நினைவிடத்தில் கவர்னர், முதல்வர், சபாநாயகர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.1999ம் ஆண்டு கார்கில் பகுதியில் இந்தியா பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இடையே போர் நடைபெற்றது. இதில் ஜூலை 26ல் பாகிஸ்தான் படைகளை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.அதனைத் தொடர்ந்து ஜூலை 26ம் தேதி ஆண்டு தோறும் கார்கில் வெற்றி தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் கார்கில் வெற்றி தினம் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.அந்தவகையில் புதுச்சேரியில் கடற்கரை சாலையில் உள்ள கார்கில் வெற்றி நினைவிடத்தில் போரின் போது உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவகொழுந்து, லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., தலைமைச்செயலர் அஸ்வனிகுமார், டி.ஜி.பி., பாலாஜி ஸ்ரீவத்சவா, செய்தி விளம்பரத் துறை செயலர் சுந்தரவடிவேலு,ஆகியோர் கலந்து கொண்டு மறைந்த ராணுவ வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.முதல்வருக்கு நன்றிகார்கில் தினத்தில் பங்கேற்க வந்த கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயண சாமியும் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து திரும்பும்போது, முதல்வர் நாராயணசாமியுடன், கவர்னர் கிரண்பேடி சிறிது நேரம் உரையாடினார். பட்ஜெட் நிதி மசோதா கூட்டத்தை அவசர அவசரமாக நடத்தியதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.மேலும் வரலாற்று நிகழ்ச்சியாக மரத்தடியில் கூட்டத் தொடர் நடத்திய சபாநாயகருக்கு வாழ்த்தும் தெரிவித்தார். கொரோனா பரிசோதனை தொடர்பாக விபரத்தை கேட்டறிந்த கவர்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X