இந்தியா

உஷார்: புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 2,787 ஆக உயர்வுதினசரி 100க்கும் மேற்பட்டோருக்கு பரவுது தொற்று

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
 உஷார்: புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 2,787 ஆக உயர்வுதினசரி 100க்கும் மேற்பட்டோருக்கு பரவுது தொற்று

புதுச்சேரி, ஜூலை 27--புதுச்சேரியில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,787 ஆக உயர்ந்துள்ளது.புதுச்சேரியில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

ஒவ்வொரு நாளும் நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்படுகிறது.நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு துவங்கி, நேற்று காலை 10:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 131 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. இதில், புதுச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் 127 பேர். காரைக்காலில் 3 பேரும், ஏனாமில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,102 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி பகுதியில் 917 பேர், காரைக்காலில் 36, மாகியில் 2, ஏனாமில் 43 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.1

,645 பேர் டிஸ்சார்ஜ்புதுச்சேரியில் 67 பேர், காரைக்காலில் 9, ஏனாமில் 8 பேர் என மொத்தம் 84 பேர் நேற்று முன்தினம் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் 1,645 பேர் மருத்துவமனைகளில் இருந்து இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.40 பேர் உயிரிழப்புகொரோனாவுக்கு நேற்று முன்தினம் வரை 38 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில், காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டு இருந்த சண்முகாபுரத்தை சேர்ந்த 58 வயது ஆண் கடந்த 16ம் தேதியன்று கதிர்காமத்தில் உள்ள கோவிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 26ம் தேதி அவர் இறந்தார். அவருக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், இருதய நோய் போன்றவை இருந்தது. இத்துடன் கோவிட் நிமோனியாவும் ஏற்பட்டதால் உயிரிழந்தார்.சோலை நகரை சேர்ந்த 57 வயது ஆண் உயர் ரத்த அழுத்தத்தால் நரம்புகள் பாதிக்கப்பட்டு கை கால் செயலிழந்த நிலையில் 23ம் தேதியன்று அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மறுநாள் 24ம் தேதி இறந்தார். மருத்துவ பரிசோதனை அறிக்கையில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து, கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X