இந்தியா

வாரம் ஒரு நாள் முழு ஊரடங்கு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

புதுச்சேரி; 'வாரம் ஒரு நாள் முழுமை யான ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்' என, சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.அவர் நேற்று அளித்த பேட்டி:கொரோனா தொற்றால் எம்.எல்.ஏ., பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அனைத்து எம்.எல்.ஏ.,க் களுக்கும் திங்கள்கிழமை கொரோனா பரிசோதனை செய்யுமாறு முதல்வர் கேட்டுக் கொண்டார். விதிப்படி 5 நாட்களுக்கு பிறகுதான் பரிசோதனை செய்ய வேண்டும். இதன்படி, வரும் புதன்கிழமையன்று பரிசோதனை செய்யலாம்.தினசரி 130 பேர், 140 பேர் என கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இன்னும் 2, 3 நாட்களில் தினசரி குறைந்தபட்சம் 300 பேர் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. உடனடியாக 500, 600 படுக்கைகள் தேவையாக உள்ளது.இதுகுறித்து முதல்வருடன் கலந்து பேசி உள்ளேன். ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் கொரோனா பாதிப்பு 6,000க்கும் மேலாக உயர வாய்ப்பு உள்ளது.தற்போது வீடுகளில் 104 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதித்தவருக்கு வேறு நோய்கள் இல்லாமல் இருக்க வேண்டும். தனியான வீடு, தனியான அறை இருந்தால் அவரது சொந்த கோரிக்கையின்படி வீட்டில் தனிமைப்படுத்த முடியும். அவர்களுக்கு காலை மற்றும் மாலையில் போன் செய்து உடல்நிலை குறித்து மருத்துவக் குழு விசாரிக்கும்.புதுச்சேரியில் குறைந்தபட்சம் 2,000 படுக்கைகள் தேவைப்படுகிறது. ஓரிரு நாட்களில் தனியார் ஓட்டல்களை பார்வையிடலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் முதலில் 100 படுக்கைகள் தயார் செய்யுமாறும், அடுத்த வாரத்தில் மேலும் 100 படுக்கைகள் வேண்டும் என்றும் கேட்டுள்ளோம்.மேலும், சுகாதாரம், உயர்கல்வி, பள்ளிக் கல்வி ஆகிய துறைகளின் இயக்குனர்களை கொண்ட குழு அமைத்து எத்தனை விடுதிகள் உள்ளன, எத்தனை கழிப்பறைகள், படுக்கைகள் உள்ளன என ஆய்வு செய்ய கூறியுள்ளோம்.இதனடிப்படையில் கூடுதல் படுக்கைகள், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் ஏற்பாடு செய்ய முடியும். திருமண மண்டபங்களில் கூடுதல் படுக்கைகள் போட்டு, டாக்டர்கள், செவிலியர்களை பணியில் அமர்த்த முடியும்.கோவிட்டுக்காக பிரத்யேக நிதி தந்தால் மருத்துவ உபகரணங்களை உடனுக்குடன் வாங்க முடியும். இதுகுறித்து, தலைமைச் செயலர், நிதித் துறை செயலர், சுகாதாரத் துறை செயலருடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 5, 6 மாதங்களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்க வேண்டி உள்ளது.வாரம் ஒரு நாள் முழு ஊரடங்கு செய்தால், மாதத்துக்கு 4 நாட்களாகி விடும். மக்கள் சாலைக்கு வருவது குறைந்தால் கொரோனா குறைய வாய்ப்புள்ளது. வியாபாரத்துக்காக பார்த்தால், மக்கள் வாழ்க்கைக்கு பிரச்னை வரும்.மற்ற மாநிலங்களில் பொதுமக்களே ஊரடங்கு அறிவிக்க வேண்டும் என்கின்றனர். இதுகுறித்து முதல்வர் முடிவு செய்வார்.இவ்வாறு, அமைச்சர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X