இந்தியா

கொரோனா டெஸ்ட் செய்தவர் சாலையோரம் உயிரிழப்பு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

புதுச்சேரி; இரண்டு முறை கொரோனா சோதனை செய்து கொண்டவர் சாலையோரம் இறந்து கிடந்தார்.அரியாங்குப்பம் ஆர்.கே.,நகர் தபால்காரன் வீதியை சேர்ந்தவர் சின்னப்பன்,75; குடிப்பழக்கத்திற்கு ஆளான அவர், கடந்த ஆறு மாதமாக குடிப்பதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் சில வாரங்களாக சுவாச பிரச்னையால் அவதிப்பட்ட அவருக்கு இருமுறை கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில், கொரோனா இல்லை என முடிவு வந்தது.இந்நிலையில் நேற்று காலை 5 மணிக்கு வீட்டில் இருந்து டீ கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் தேடியபோது, அரியாங்குப்பம் மாஞ்சாலை ரோட்டில் இறந்து கிடந்தார்.தகவல் அறிந்த அரியாங்குப்பம் போலீசார் விரைந்து சென்று சின்னப்பன் உடலை கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X