இந்தியா

அக மதிப்பீடு மதிப்பெண் மாற்றம் அரசு பள்ளி மாணவி தவிப்பு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

புதுச்சேரி; மாணவியின் அதிக மதிப்பீடு மதிப்பெண்ணை மாற்றி பதிவு செய்த ஆசிரியர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர் பெற்றோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இது குறித்து புதுச்சேரி மாணவர் பெற்றோர் சங்க தலைவர் பாலா விடுத்துள்ள அறிக்கை:திருவள்ளுவர் அரசு மேனிலைப்பள்ளி மாணவி லோகஸ்ரீ பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். அவருடைய அகமதிப்பீடு வணிகவியல் பாடப்பிரிவில் 10 மதிப்பெண்ணிற்கு 8ம், வணிக கணிதம் பாடத்தில் 10 மதிப்பெண்ணிற்கு 8 மதிப்பெண் தவறாக அளித்துள்ளனர்.இந்த மாணவியின் மதிப்பெண் அதே பள்ளி யில் பிளஸ் 2 படித்து இறுதி தேர்வு எழுதாத வேறு ஒரு மாணவிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது பள்ளி கல்வித் துறை அதிகாரிகளின் மெத்தன போக்காலும், அலட்சியத்தாலும் நடந்துள்ளது.இதற்கு காரணமான பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இப்பள்ளி மாணவி எடுத்த 497 மதிப்பெண்ணிற்கு பதிலாக 501 மதிப்பெண்ணாக மாற்றி மதிப்பெண் சான்றிதழ் வழங்க வேண்டும்.இது போன்று எத்தனை மதிப்பெண் சான்றிதழ்களில் இப்படி நடந்துள்ளது என பள்ளி கல்வித் துறை விசாரணை நடத்த வேண்டும். தவறாக அளிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழை திருத்தி, உண்மையான மதிப்பெண் சான்றிதழை வழங்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X