இந்தியா

புரளிகளை நம்ப வேண்டாம்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

புதுச்சேரி; உறுதிபடுத்தப்படாத செய்திகளை அனுப்பவோ, பரப்பவோ வேண்டாம் என கவர்னர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இல கணேசன் புதுச்சேரி கவர்னராக நியமிக்கப்பட்டு, கிரண்பேடி மத்திய அரசில் இணையப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.இதுகுறித்து கவர்னர் கிரண்பேடி விடுத்துள்ள வேண்டுகோள்:எனதருமை நண்பர்களே இந்த செய்தி போல் எனக்கு நிறைய செய்திகள் வந்துள்ளன. இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. தயவு செய்து உறுதிப்படுத்தப்படாத செய்திகளை அனுப்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம்.புதுச்சேரியில் கொரோனா மிக வேகமாக வளர்ந்து வருவதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதை அறவே அகற்ற அதிகப்பட்ச சமூக ஒத்துழைப்பு தேவை. இந்த அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கும், ஒன்றிணைந்து பணியாற்றுவதற்காகவும், மிகுந்த அர்ப்பணிப்பு தேவை. இதில் கவனச்சிதறல்களை தவிர்ப்போம். நாம் ஒரு அணியாக திரண்டு செயல்படுவோம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X