பொது செய்தி

தமிழ்நாடு

தினமும் 2000 லிட்டர் கபசுர குடிநீர் காய்ச்சி மதுரைக்கு உதவும் ஒரு மகத்துவ குடும்பம்

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
 தினமும் 2000 லிட்டர் கபசுர குடிநீர் காய்ச்சி மதுரைக்கு உதவும் ஒரு மகத்துவ குடும்பம்

மதுரை:மதுரையில் தினமும் 2 ஆயிரம் லிட்டர் கபசுர குடிநீரை காய்ச்சி கொரோனா பணியில் மக்களுக்கு உதவும்மகத்துவ குடும்பத்திற்குபல்வேறு தரப்பில்இருந்தும் பாராட்டு குவிகிறது.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாநகராட்சிக்கு தன்னார்வலர்களின் உதவி தேவைப்பட்டது. சேவை மனப்பான்மை கொண்ட மாணவி அபராஜிதா 17, தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்களும் உதவ முன்வந்தனர். 'தினமும் 200 லிட்டர் கபசுர குடிநீர் காய்ச்சி தர வேண்டும்' என மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டது. ஆனால் மாணவியின் குடும்பமோ தினமும் 2000 லிட்டரை காய்ச்சிகொடுத்து அபார பங்களிப்பை வழங்கி வருகிறது.

தந்தை கண்ணன், 'மை மதுரை' பள்ளி இயக்குனர். தாய் கீதா, தாளாளர். டி.வி.எஸ்., நகரில் வசிக்கின்றனர். வீட்டில் கபசுர குடிநீர் காய்ச்சி மாநகராட்சிக்கு வழங்குகின்றனர். இவர்களின் பணியை கமிஷனர் விசாகன் பாராட்டினார். இப்போது உள்ளாட்சிதுறை அமைச்சர் வேலுமணியின் வாழ்த்தையும் இக்குடும்பம் பெற்றுள்ளது.

கண்ணன் கூறுகையில், ''கபசுர குடிநீருக்கான பொடி, தண்ணீர், காஸ் போன்றவற்றை மாநகராட்சி தருகிறது. நாங்கள் காய்ச்சி வழங்குகிறோம். வீட்டருகே உள்ள 'கவுன்டரில்' தினமும் 150 லிட்டர் காலியாகிறது. எங்கள் பணி துவங்கி 73 நாட்கள் நிறைவு பெற்றுள்ளன'' என்றார்.


latest tamil news



கீதா கூறுகையில், ''தினமும் அதிகாலை 3:30 மணிக்கு பணியை துவங்க பழகிவிட்டோம். இப்பணியை விரிவுப்படுத்த உள்ளோம். ஜெய்ஹிந்த்புரத்தில் 5 இடங்களில் கபசுர குடிநீர் மையம் திறக்க இருக்கிறோம். கொரோனா ஓயும் வரை இப்பணியை விடுவதாக இல்லை'' என்றார். இவர்களை வாழ்த்த: 98421 85333

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X