பொது செய்தி

தமிழ்நாடு

முடிவுக்கு வந்த ஜூலை மாத ஞாயிறு ஊரடங்கு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

ஈரோடு: கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, நேற்று தளர்வில்லா முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஜூலை மாதத்தில் வரும், நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும், தளர்வில்லா முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று, அரசு அறிவித்தது. இதன்படி, மூன்று ஞாயிறுகள் முடிவுக்கு வந்த நிலையில், கடைசி ஞாயிறு முழு ஊரடங்கு, நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. வழக்கம்போல் முழு ஊரடங்கை, ?? சதவீத மக்கள் கடைபிடித்தனர். அடங்காத சிலர் மட்டும், நடந்தும், டூவீலர்களில் பறந்தும் திரிந்தனர். நேற்றைய முழு ஊரடங்கால், ஈரோடு மாநகர், மாவட்டத்தில், சாலைகள், தெருக்கள், கடைவீதி என அனைத்தும் முடங்கியது. ஆள், வாகன நடமாட்டமின்றி சாலைகள் அமைதியில் மூழ்கின.


மதுவுக்கு பஞ்சமில்லை: தினக்கூலிகளாக வேலைக்கு சென்று, மாநகர சாலைகளில் வாழ்வோர், உணவு கிடைக்காமல் தவித்தனர். பலர் அம்மா உணவகங்களிலும், சிலர் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் அன்னதான திட்டத்திலும், மதிய உணவு சாப்பிட கூடினர். முழு ஊரடங்கிலும், குடிமகன்களின் குதூகலத்துக்கு பஞ்சம் வரவில்லை. மாநகர், மாவட்டத்தில் வழக்கம்போல் செயல்படும், சந்து கடைகளில், ஆட்களிடம் விலையை பற்றி கவலைப்படாமல், மது வாங்கி குடித்து மகிழ்ந்தனர்.

அம்மா உணவகத்தில் கூட்டம்: கோபி கச்சேரிமேட்டில் உள்ள, அம்மா உணவகத்தில், நேற்று காலை முதலே கூட்டம் அதிகமாக இருந்தது. காலையில் இட்லி, பொங்கல், தோசை; மதியம் சாப்பாடு, சாம்பார் வினியோகிக்கப்பட்டது. கோபி அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் உறவினர்கள், அதிகம் சாப்பிட்டனர்.

15 பேருக்கு அபராதம்: கோபியில் பல்வேறு இடங்களில், போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். டூவீலர், கார்களில் வந்த ஒரு சிலரையும், விசாரித்த பிறகே அனுப்பினர். இதில் விதிமீறியதாக, 15 வாகன ஓட்டிகளுக்கு, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X