பொது செய்தி

தமிழ்நாடு

யாசகனாக இருந்து டீ வியாபாரியான பட்டதாரி: ஆதரவற்றோருக்கு தானம் வழங்கும் தமிழரசன்

Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
மதுரை: ஒன்றரை வயதில் தந்தை ஆறுமுகம் விபத்தில், தாய் வள்ளி நோயால் இறக்க, பசிக்காக அழுத குழந்தையை ஆறுமுகத்தின் நண்பர் குட்டி எடுத்து வளர்த்தார். வறுமையால் அருப்புக்கோட்டை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்ட அக்குழந்தை, பி.எஸ்.சி., படித்து பிழைக்க வழிதேடி யாசகனாகி,இன்று டீ வியாபாரியாக, சமூக சேவகராக தமிழரசன் 23, என்ற பெயரில் வளர்ந்து நிற்கிறது.தமிழரசன் பேசுகிறார்... சொந்த
 யாசகனாக இருந்து டீ வியாபாரியான பட்டதாரி:  ஆதரவற்றோருக்கு தானம் வழங்கும் தமிழரசன்

மதுரை: ஒன்றரை வயதில் தந்தை ஆறுமுகம் விபத்தில், தாய் வள்ளி நோயால் இறக்க, பசிக்காக அழுத குழந்தையை ஆறுமுகத்தின் நண்பர் குட்டி எடுத்து வளர்த்தார்.

வறுமையால் அருப்புக்கோட்டை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்ட அக்குழந்தை, பி.எஸ்.சி., படித்து பிழைக்க வழிதேடி யாசகனாகி,இன்று டீ வியாபாரியாக, சமூக சேவகராக தமிழரசன் 23, என்ற பெயரில் வளர்ந்து நிற்கிறது.

தமிழரசன் பேசுகிறார்... சொந்த ஊர் துாத்துக்குடி. பட்டப்படிப்பு முடித்த பின் 2017ல் வேலை தேடி சென்னை சென்றேன். பணம் இல்லாததால் ரயில்வே ஸ்டேஷன், கடற்கரையில் தங்கினேன். கடைகளில் சிபாரிசுன்றி வேலை தர மறுத்தனர். உடைமைகள், சான்றிதழ் திருடு போயின. பசி கொடுமையால் கீழே கிடந்த உணவுகளை சாப்பிட்டிருக்கிறேன்.பிழைக்க வழியின்றி ரயில்வே ஸ்டேஷனில் யாசகனாககையேந்தினேன். இரண்டு ஆண்டுகள் தடம் புரண்ட ரயிலாக கிடந்த நான் ஓராண்டுக்கு முன் மதுரை வந்தேன்.

வேலை கிடைக்காததால் ரயில்வே ஸ்டேஷனில் யாசகம் கேட்பது, குப்பை சேகரிப்பது என மீண்டும் தடம் புரண்டேன்.வழி போக்கனாய் 7 மாதங்களுக்கு முன் அலங்காநல்லுார் வந்து கொரோனா ஊரடங்கில்பசியுடன் போராடினேன். யாசகம், சிறு வேலை பார்த்ததில் ரூ.7 ஆயிரம் கிடைத்தது. ஒரு இளைஞர் வாடகைக்கு வீடு கிடைக்க உதவினார்.

இருந்த பணத்தில் பாத்திரங்கள் வாங்கி தம் டீ போட்டு விற்கிறேன். ஆதரவற்றோருக்கு டீ, உணவு தானம்கொடுத்து ஆறுதலாக இருக்கிறேன், என கண்ணீர் கதைகூறி தேநீர் கேனுடன் சூடாக கிளம்பிய தமிழரசனுக்கு சொந்தமாக டீ கடை வைப்பதே லட்சியம்.

- இவரை பாராட்ட 63794 76932.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
27-ஜூலை-202017:32:33 IST Report Abuse
Tamilnesan வாழ்த்துக்கள். முயற்சி திருவினையாக்கும். இவர் சென்னைக்கு ரயிலில் டிக்கெட் எடுத்து வந்திருப்பார் என்று நினைக்கிறேன். அப்படி செய்யாமல் வித் அவுட்டில் சென்னைக்கு வந்திருந்தால் எதிர் காலத்தில் ஆசியாவிலே பெரிய பணக்காரராக உயர்ந்திருப்பார்.
Rate this:
Cancel
prem TRUTH - Madurai ,இந்தியா
27-ஜூலை-202016:12:40 IST Report Abuse
prem  TRUTH உழைப்பு ஒரு உன்னத நிலைக்கு நிச்சயம் உயர்த்தும்.... பசியின் கொடுமை உணர்ந்த நீயே உயிர்களுக்கெல்லாம் பசிப்பிணி போக்கும் மருத்துவனாக ஆகப்போகிறாய்... உனது கண்களில் தெரிகின்ற நம்பிக்கை ஒளி நனவாக எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன் அன்பே...
Rate this:
Cancel
27-ஜூலை-202013:39:58 IST Report Abuse
ஆனந்தி நீ நீண்ட ஆயுளோடு நிறைவான செல்வதோடு கூடா நட்போடு வாழ வேண்டும் என்று இந்த அம்மா உன்னை வாழ்த்துகிறேன் வறுமையிலும் ஒழுக்கத்தை கைவிடாதே மற்றும் விடா முயற்சி மகா வெற்றி இது என்னுடைய ஆழமான அறிவுரை வாழ்த்துக்கள் மகனே💐
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X