பொது செய்தி

தமிழ்நாடு

தரிசு நிலத்தை விளை நிலமாக்க எக்டேருக்கு ரூ.10 ஆயிரம் மானியம்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

மதுரை:

தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் 5 ஆண்டுகள் பயனில்லாத தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் சிறப்பு தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.கலெக்டர் வினய், வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன் தெரிவித்துள்ளதாவது: மதுரை மாவட்டத்தில் தரிசு நிலங்கள் 23,477 எக்டேர் உள்ளன. தலா நுாறு எக்டேரில் சிறுதானியங்கள், பயறு வகைகள் தரிசு நிலங்களில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவையான இடுபொருட்கள் 50 சதவீத மானியத்தில் சிறுதானியங்களுக்கு எக்டேருக்கு ரூ.10 ஆயிரம், பயிறு வகைகள் சாகுபடிக்கு 50 சதவீத மானியத்தில் ரூ.925ம் வழங்கப்படுகிறது.சிறுதானியங்கள் பயிரிட திருமங்கலம், கள்ளிக்குடி, தே.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி மற்றும் பயறு வகைகள் சாகுபடி செய்ய மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம், மேலுார், கொட்டாம்பட்டி, கள்ளிக்குடி, செல்லம்பட்டி ஒன்றியங்களில் கள ஆய்வு நடக்கிறது. விவசாயிகள் பொது இ--சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் முன்பதிவு செய்யலாம், என தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X