பொது செய்தி

தமிழ்நாடு

நெல் கொள்முதல் மையங்கள் திறக்க கலெக்டர் உத்தரவு: தினமலர் செய்தி எதிரொலி

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement


மதுரை:

செல்லம்பட்டி பகுதியில் தினமலர் செய்தி எதிரொலியாக நெல்கொள்முதல் மையங்களை திறக்க கலெக்டர் வினய் உத்தரவிட்டார்.இப்பகுதியில் தாமத சாகுபடி, கிணற்று பாசனத்தில் விளைந்த நெல்லை விவசாயிகள் அறுவடை செய்து கொள்முதல் மையங்களில் வைத்திருந்தனர். ஊரடங்கால் கொள்முதல் நிறுத்தப்பட்டதால் அவை வீணாகின. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.அதன் எதிரொலியாக செல்லம்பட்டி பகுதியில் 21 இடங்களில் கொள்முதல் மையங்களை திறக்க கலெக்டர் உத்தரவிட்டார். மையங்களை திறக்கும் பணியில் நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் புகாரி தலைமையில் உதவி மேலாளர் திருமுருகன் மற்றும் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X