ஆடி 18 விதைப்புக்கு தயாராகும் விவசாயிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆடி 18 விதைப்புக்கு தயாராகும் விவசாயிகள்

Added : ஜூலை 27, 2020
Share

திருப்பரங்குன்றம்:

திருப்பரங்குன்றத்தை சுற்றி வைகை அணை நீரால் நிரம்பும் கண்மாய்களும், கிணறு, ஆழ்குழாய் மற்றும் மழையை நம்பியுள்ள மானாவாரி கண்மாய்களும் உள்ளன. கடந்தாண்டு அணை நீரால் கண்மாய்கள் நிரம்பின. விவசாயிகள் நெல் பயிரிட்டனர். மானாவாரி பகுதிகளில் கிணறு, ஆழ்குழாய்களில் தண்ணீர் இருந்தவர்கள் மட்டும் விவசாயப் பணிகளை மேற்கொண்டனர்.விவசாயிகள் கூறுகையில், ''சில நாட்களாக மழை பெய்தது. இது தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆடி 18ல் நெல் நாற்று பாவவும், காய்கறிகள் விதைகள் விதைக்கவும் தற்போது நிலங்களை உழுது வருகிறோம்'' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X