பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் பரிசல் ஏலத்துக்கு தடை: ஆற்றை கடக்க முடியாமல் மக்கள் அவதி

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

கோபி: கோபி யூனியன், அம்மாபாளையம் பஞ்.,ல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பவானி ஆற்றங்கரையோரம் உள்ளது. இவர்களின், பிரதான போக்குவரத்து சாதனமாக பரிசல் உள்ளது. படிப்பு முதல் கூலி வேலை வரை, ஆற்றை கடந்து, பரிசலில் மட்டுமே வெளியூர் செல்ல முடியும். மறுகரையான அந்தியூர் யூனியன் கைகாட்டி பிரிவு கரைக்கும் சென்று வர, இரு யூனியன் சார்பில், தனியார் மூலம் தலா ஒரு பரிசல் இயக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் ஒப்பந்த காலம் முடிந்தது. கொரோனா தொற்றால், ஏலம் நடத்த முடியவில்லை. இதனால் இரு கரையை சேர்ந்த மக்களும், அத்தியாவசிய தேவைக்காக, பல கி.மீ., தூரம் சுற்றுவழிச்சாலையில் நடந்து சென்று அவதியுறுகின்றனர்.


இதுகுறித்து அம்மாபாளையம் மக்கள் கூறியதாவது: ஆற்றை கடக்க, ஆண்டுக்கு ஒருமுறை ஏலம் நடக்கிறது. கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பந்தம் முடிந்த நிலையில், கொரோனா பிரச்னையால் ஏலம் நடக்கவில்லை. இதனால், பரிசல் ஓட்டிகள், செக்யூரிட்டி, சமையல் வேலைக்கும் சென்று விட்டனர். இதனால் நான்கு மாதங்களாக, ஆறு கி.மீ., தூரம் சுற்றுவழிச்சாலையில், நடந்து அவதிப்படுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து கோபி ஆர்.டி.ஓ., ஜெயராமனிடம் கேட்டபோது, ''இரு யூனியன் பி.டி.ஓ.,க்களுக்கும், தகவல் தெரிவித்து, பரிசல் இயக்கம் குறித்து வலியுறுத்தப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X