பொது செய்தி

தமிழ்நாடு

நஞ்சை ஊத்துக்குளி வந்த வட மாநில தொழிலாளர் மூன்று பேருக்கு தொற்று

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

மொடக்குறிச்சி: நஞ்சை ஊத்துக்குளிக்கு வந்த, பீஹார் மாநில தொழிலாளர் மூவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மொடக்குறிச்சி, நஞ்சை ஊத்துக்குளியில், தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு பணிபுரிய, பீஹார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள், 41 பேர், வாகனத்தில், கடந்த, 17ல் சென்னை வந்தனர். அங்கிருந்து மற்றொரு வாகனத்தை பிடித்து, 20ம் தேதி ஈரோடு வந்தனர். அனைவருக்கும் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரியில், பி.சி.ஆர்., பரிசோதனை நடந்தது. இதில், 37, 25, 40 வயது கொண்ட மூன்று ஆண்களுக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டது. மூவரும் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்ற, 38 வட மாநில தொழிலாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X