பொது செய்தி

தமிழ்நாடு

திசு வாழைக்கன்று தொழில்நுட்ப பயிற்சி: பவானிசாகர் விவசாயிகள் கோரிக்கை

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

பவானிசாகர்: செவ்வாழையில், திசு கன்றுகளை உற்பத்தி செய்து, தொழில்நுட்பம் மற்றும் பராமரிப்பு குறித்து, தோட்டக்கலைத்துறை பயிற்சியளிக்க, பவானிசாகர் விவசாயிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.


பவானிசாகர் சுற்றுவட்டார பகுதியில், 100க்கும் மேற்பட்ட கிராமங்களில், வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு விளையும் வாழைத்தார், அதிக அளவில் கேரளம், அடுத்தபடியாக மும்பைக்கு செல்கிறது. நேந்திரன், கதலி, ஆந்திரா ரஸ்தாளி, ஜி-9 ஆகிய ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. சில ஆண்டுகளாக, பல்வேறு ரக வாழை பயிரிடுவதில், விவசாயிகள் ஆர்வம் காட்டினர். குறிப்பாக மலைவாழை, செவ்வாழை, கற்பூரவள்ளி, நெய் வாழை, புளி வாழை, ஆட்டுக்கொம்பன், மொந்தன் வாழை சாகுபடி செய்தனர். சருகு, வாடல் நோயால், செவ்வாழை மற்றும் மலைவாழை சாகுபடியை, விவசாயிகள் தவிர்த்தனர். நோய் தாக்குதலில் இருந்து, மலைவாழையை காப்பாற்றிய போதும், செவ்வாழையை மீட்க முடியாத நிலையில், சாகுபடி பரப்பு குறைந்தது. செவ்வாழை, 15 மாதங்களில் அறுவடைக்கு வரும். வைட்டமின் சத்து நிறைந்ததாகவும், மலச்சிக்கலை தவிர்ப்பதாகவும் செவ்வாழை உள்ளது. இதனால் எப்போதும் மவுசு உண்டு. தற்போது மார்க்கெட்டில் குறைந்த அளவு தார்களே விற்பனைக்கு வருகிறது. தரத்துக்கு ஏற்ப விலை கிடைக்கிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ஒரு ஏக்கரில் வாழைக் கன்று நடவு செய்து பலனுக்கு வரும் வரை, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது. ஆனாலும், மற்ற பயிர்களைவிட, வாழை சாகுபடி லாபகரமான தொழிலாக உள்ளதால், சமீபமாக வாழை சாகுபடி அதிகரித்துள்ளது. அதேசமயம், செவ்வாழை உற்பத்தி பரப்பை அதிகரிக்க, வாழை ஆராய்ச்சி நிலையம் மூலம், திசு கன்றுகளை உற்பத்தி செய்து, தொழில்நுட்பம் மற்றும் பராமரிப்பு குறித்து பயிற்சியளித்தால், செவ்வாழை லாபம் தரும் விவசாயமாக மாறும். இதற்கு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X