சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளுடன் மகள் மாயம்: சென்னிமலை தந்தை புகார்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

மொடக்குறிச்சி: குழந்தைகளுடன் மகள் மாயமாகி விட்டதாக, போலீசில் தந்தை புகார் அளித்துள்ளார். அவல்பூந்துறை, கவுண்டிச்சிபாளையத்தை சேர்ந்தவர் ராஜன், 57, கூலி தொழிலாளி. இவரின் மகள் மஞ்சுளா, 27; இவரின் கணவர், சென்னிமலை அருகேயுள்ள பசுவப்பட்டி, கே.சி.காலனியை சேர்ந்தவர் இளங்கோ. தம்பதியருக்கு எட்டு, மூன்று வயதில் மகள்கள் உள்ளனர். கடந்த, 17ம் தேதி, தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதையறிந்த ராஜன், மகள், பேத்திகளை, தனது வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார். கடந்த, 20ல் மகள்களுடன், வெள்ளோடு பஸ் நிறுத்தத்துக்கு, வந்த மஞ்சுளா பூபதி என்பவரின், டூவீலரில் லிப்ட் கேட்டு சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அரச்சலூர் போலீசில், ராஜன் புகாரளித்தார். போலீசார் விசாரணையில், கணவர் வீட்டருகேயுள்ள அருண் என்பவருடன், மொபைல்போனில் அடிக்கடி பேசி வந்தது தெரிய வந்தது. தற்போது மகனை காணவில்லை என, அருணின் தந்தை, சென்னிமலை போலீசில், புகாரளித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அரச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X