தமிழ்நாடு

12 அதிகாரி உள்பட 162 பேருக்கு 'வைரஸ்': சேலம் மாவட்ட பாதிப்பு 3,001 ஆக உயர்வு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

சேலம்: இரும்பாலை அதிகாரிகள், 12 பேர் உள்பட, ஒரே நாளில், 162 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், சேலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 3,001 ஆக உயர்ந்துள்ளது.
சேலத்தில், நேற்று புதிதாக, 162 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், சேலம் மாநகரில், 92 பேர், ஓமலூர், 10, காடையாம்பட்டி, 9, வீரபாண்டி, அயோத்தியாப்பட்டணம், தலா, 7, வடுகம்பட்டி, 5, இடைப்பாடி நகராட்சி பகுதி, வாழவந்தி, தலா, 4, மகுடஞ்சாவடி, 3, கொளத்தூர், மேட்டூர் நகராட்சி, சேலம் ஒன்றியம், பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல், வாழப்பாடி, பனமரத்துப்பட்டி, தலா ஒருவர் வீதம், 149 பேர், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். தவிர, தூத்துக்குடி, 4, சென்னை, நாமக்கல், ஈரோடு, செங்கல்பட்டு, அரியலூர், தலா ஒன்று, கர்நாடகா, 3, ராஜஸ்தான் ஒருவர் என, 162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் அரசு மருத்துவமனை, தனியார் கல்லூரிகளில், 492 பேர், கொரோனா வார்டில் தனிமையில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை, 3,001 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த, 13ல், சேலம், இரும்பாலையில், ஆய்வு கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற, தலைமை அதிகாரி மூலம், மற்றொரு தலைமை அதிகாரி, இரு உதவி பொது மேலாளர், ஒரு துணை மேலாளர், பொது மேலாளர், சீனியர் மேலாளர், ஆப்பரேட்டர் ஐவர் என, 12 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தவிர, சேலம் அரசு மருத்துவமனை செவிலியர் நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நான்கு பேருடன், மருத்துவமனையில், இதுவரை, 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

23 பேர் குணம்: கருப்பூர், பெரியார் பல்கலை வளாகத்தில் செயல்படும், கொரோனா சிகிச்சை மையத்தில், நேற்று மதியம் வரை, 163 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அதில், 23 பேர் குணம் அடைந்ததால், வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X