பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுக்கு 3 பேர் பலி; இறப்பு 31 ஆக அதிகரிப்பு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

சேலம்: கொரோனாவுக்கு, மூவர் உயிரிழந்ததால், அதன் எண்ணிக்கை, 31 ஆக அதிகரித்துள்ளது.


சேலம், பட்டைக்கோவில் அருகே, பச்சமுத்து தெருவை சேர்ந்த, 80 வயது மூதாட்டி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கடந்த, 22ல், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், கொரோனா கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். ஆனால், நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணிக்கு, அவர் இறந்துவிட்டார். அன்னதானப்பட்டியை சேர்ந்தவர், 56 வயது ஆண். கடந்த, 25 இரவு, 7:30 மணிக்கு, காய்ச்சலால், சேலம், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், அரை மணி நேரத்தில் இறந்துவிட்டார். பின், நடந்த பரிசோதனையில், தொற்று உறுதி செய்யப்பட்டது. அஸ்தம்பட்டி, மணக்காடு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர், 62 வயது ஆண். இவர், திடீரென உடல் சுகவீனம் அடைந்து, கடந்த, 16 இரவு, 9:00 மணிக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், தொற்று உறுதியானது. பின், கொரோனா வார்டில், தனிமையில் இருந்தவர், நேற்று காலை, 8:15 மணிக்கு இறந்துவிட்டார். ஏற்கனவே, கொரோனாவால், அரசு மருத்துவமனையில், 28 பேர் இறந்திருந்த நிலையில், தற்போது, அதன் எண்ணிக்கை, 31 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X