பொது செய்தி

தமிழ்நாடு

ஆயுதப்படை குடியிருப்பில் 9 பேருக்கு தொற்று: வெளியாட்கள் நுழைய தடை

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

சேலம்: லைன்மேடு ஆயுதப்படை குடியிருப்பில், ஒன்பது பேருக்கு தொற்றால், அங்கு வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.


சேலம், லைன்மேட்டில், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரே, போலீசாருக்கு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு, 270க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்நிலையில், குடியிருப்பின், 'இ' பிளாக்கில், நேற்று முன்தினம், 10க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 59 வயது மூதாட்டி, 47 வயது போலீஸ் ஏட்டு, 46 வயது பெண் போலீஸ், 24 வயது போலீஸ், 13, 15, 18 வயது பெண் குழந்தைகள், 36, 35 வயது பெண் ஏட்டு என, ஒன்பது பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், அந்த பிளாக்கில் வசிப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால், குடியிருப்பு பகுதி முழுதும், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, உள்ளே இருந்து, வெளியே ஆட்கள் செல்ல, வெளியாட்கள் உள்ளே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X