பொது செய்தி

தமிழ்நாடு

ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

ஆத்தூர்: ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், நேற்று, 12 பேருக்கு, கொரோனா உறுதியானது.


தலைவாசலைச் சேர்ந்த, 25, 41 வயது ஆண்கள்; நத்தக்கரை, 54 வயது ஆண்; வெள்ளையூர், 21 வயதுடைய ஏழு மாத கர்ப்பிணி; காட்டுக்கோட்டை, 45 வயது பெண் ஆகியோருக்கு, நேற்று, கொரோனா உறுதியானது. கெங்கவல்லி அருகே, கடம்பூர், பாரதிபுரம், 60 வயது பெண்; வாழப்பாடியில், சேலம் தனியார் ஜவுளி கடையில் பணிபுரியும், 45 வயது தொழிலாளிக்கும் தொற்று உறுதியானது. பெத்தநாயக்கன்பாளையம் அருகே, பாப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த, 22 வயது பெண், சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டார். இரு நாளுக்கு முன் குழந்தை பிறந்தது. தாய்க்கு, தொற்று உறுதியானது. அதேபோல், ஏத்தாப்பூர், மூன்றாவது வார்டில், ஒரே குடும்பத்தில், 24, 31, 49, 53 வயதுடைய நான்கு பேருக்கு, தொற்று உறுதியானது. இவர்கள், ஆத்தூர், சேலம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேட்டுக்கடையில் 2 சிறுமி: இடைப்பாடி நகராட்சி, கேட்டுக்கடை பகுதியில், ஒரு கர்ப்பிணிக்கு, 10 நாளுக்கு முன் தொற்று ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, 35 பேருக்கு உறுதி செய்யப்பட்டு, சேலம், மேட்டூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த, 6, 10 வயது சிறுமிகளுக்கு, நேற்று, கொரோனா உறுதியானது. இரு குழந்தைகளும், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாவாந்தெருவைச் சேர்ந்த, 27 வயது ஆண், 26 வயது பெண்ணுக்கு கொரோனா உறுதியானது. கொங்கணாபுரம், வெள்ளாளபுரத்தைச் சேர்ந்த, 24 வயது ஆணுக்கு தொற்று உறுதியானது. இவர்கள், காகாபாளையம், நாலெட்ஜ் கல்லூரி மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். கொங்கணாபுரத்தைச் சேர்ந்த, 68 வயது ஆண் தொழிலாளி, உடல்நிலை சரியில்லாமல், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் உறுதியானது. பின், அங்கேயே கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X