பொது செய்தி

தமிழ்நாடு

இ - பாஸ் இல்லாத 55 பேர் மீது வழக்கு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

சேலம்: வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து, இ - பாஸ் இல்லாமல், சேலம் வந்த, 55 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். இதுகுறித்து, சேலம் மாநகராட்சி கமிஷனர் சதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து, இ - பாஸ் இல்லாமல் வருபவர்களை, மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் கண்காணித்து வருகின்றனர். மீறி வந்தவர் மீது, போலீசார் வழக்குப்பதிந்து வருகின்றனர். அதன்படி, சூரமங்கலம் மண்டலத்தில், எட்டு பேர், அஸ்தம்பட்டியில் ஒருவர், அம்மாபேட்டையில், 31 பேர், கொண்டலாம்பட்டி மண்டலத்தில், 15 பேர் என, 55 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். மக்கள், அரசு அனுமதியின்றி, வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து வருவோர் குறித்த விபரத்தை, மாநகராட்சி அலுவலகம், அதிகாரிகள், போலீசாருக்கு தெரிவித்து, கொரோனா பரவலை தடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X