பொது செய்தி

தமிழ்நாடு

பிரசவமான பெண்ணுக்கு உறுதி

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

சங்ககிரி: சங்ககிரி, பழைய இடைப்பாடி சாலையைச் சேர்ந்த, 25 வயது ஆண், சேலம் பிரதான சாலையில் உள்ள ஓட்டலில் பணிபுரிகிறார். சில நாளாக காய்ச்சல் இருந்ததால், சங்ககிரி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார். அதில், தொற்று இருப்பது, நேற்று முன்தினம் உறுதியானது. அதேபோல், மஞ்சக்கல்பட்டியைச் சேர்ந்த, 55 வயது மூதாட்டிக்கு, தொற்று இருப்பது உறுதியானது. இவரது மகன், ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தார். தேவூர், புளியம்பட்டியை சேர்ந்த, 19 வயது பெண், நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த, 24ல், பிரசவமான நிலையில், அப்பெண்ணுக்கு சளி மாதிரி எடுத்ததில் கொரோனா உறுதியானது. அதே பகுதியை சேர்ந்த, 33 வயது ஆண், நாமக்கல் மாவட்டம், குமார பாளையத்தில், தையல் கடை நடத்துகிறார். இவருக்கும், இவரது, 27 வயது மனைவிக்கும் தொற்று உறுதியானது. இவர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X