பொது செய்தி

தமிழ்நாடு

சான்று பெற்ற தரமான விதை பயன்படுத்த அறிவுரை

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

கெங்கவல்லி: கெங்கவல்லி வேளாண் உதவி இயக்குனர் சித்ரா வெளியிட்டுள்ள அறிக்கை: கெங்கவல்லியில், தற்போது பருவ மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. இதை பயன்படுத்தி விதைப்பு பணி மேற்கொள்ள உள்ள விவசாயிகள், சான்று பெற்ற தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும். கெங்கவல்லி, தம்மம்பட்டி ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்களில், சான்று பெற்ற விதைகள், மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க இருப்பு வைக்கப்பட்டுள்ளன. நெல் ரகம் கோ - 51, ஏ.டி.டி., 45, வெள்ளை பொன்னி, டி.கே.எம்., - 13 போன்ற ரகங்கள், கம்பு கோ - 10, பயிறு வகைகளில், துவரை கோ - 8, உளுந்து, வம்பன் - 6, கடலை வி.ஆர்.ஐ., - 8, ஜி.ஜெ.ஜி., - 9 மானிய விலையில் வழங்கப்படும். நுண்ணுயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் டி - விரிடி சூடோமோனஸ் போன்ற உயிர் கொல்லிகளும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X