பொது செய்தி

தமிழ்நாடு

சாத்தான்குளம் விவகாரம் குறித்து அவதூறு: ஆத்தூர் வக்கீல் மீது 6 பிரிவில் வழக்குப்பதிவு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

ஆத்தூர்: சாத்தான்குளம் விவகாரம் குறித்து, கலவரத்தை ஏற்படுத்தும்படி பேசியதாக, ஆத்தூர் வக்கீல் மீது, ஆறு பிரிவில், போலீசார் வழக்குப்பதிந்தனர்.


சேலம் மாவட்டம், ஆத்தூர், அப்பமசமுத்திரம், வடக்கு காடு பகுதியைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராசு, 70. இவர், கடந்த, 7ல், ஆத்தூர் டவுன் போலீசில் அளித்த புகார்: ஆத்தூரை சேர்ந்த, வாழ்வா சாவா கட்சி தலைவர் என அறிமுகம் செய்து கொண்ட வக்கீல் சுரேஷ், சாத்தான்குளத்தில் தந்தை, மகனை, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., போலீசார், அடித்துக் கொன்றுவிட்டனர். தமிழகத்துக்கு, போலீஸ் தேவையில்லை. போலீஸ், நீதித்துறை குறித்து தவறாக ஆடியோ பதிவு செய்து, வாட்ஸ்ஆப் குழுக்களில் வெளியிட்டார். பொய் தகவல், மக்களிடையே நல்லுறவை கெடுக்கும்படி பேசிய வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். ஆத்தூர் டவுன் போலீசார், வக்கீல் சுரேஷ், 38, மீது, தகாத வார்த்தையில் திட்டுதல், அரசு மீது அவநம்பிக்கை ஏற்படுத்தும்படி, போலீசாரை அவதூறாக பேசுதல்; பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அரசு ஊழியர்களை கொலை செய்வதாக மிரட்டுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தல் பிரிவுகளில் வழக்குப்பதிந்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X