பொது செய்தி

தமிழ்நாடு

குட்கா விற்பவர்கள் விபரம் தயார்: போலீசாரால் வியாபாரிகள் அலறல்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

சேலம்: குட்கா, ஹான்ஸ் விற்போர் விபரம் குறித்த பட்டியல் தயாரானதால், மொத்த வியாபாரிகள், கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், அலற தொடங்கியுள்ளனர்.


பெங்களூருவில் இருந்து, சேலம் வழியாக கடத்த முயன்ற, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹான்ஸ் மூட்டைகளை, கடந்த மே, 21ல், போலீசார் மடக்கி, அதன் டிரைவரான, சேலம் மாவட்டம், காடையாம்பட்டி, செக்காரப்பட்டியை சேர்ந்த ஜம்பு, 40, என்பவரை கைது செய்தனர். ஜூன், 10ல், ஒரு லாரியை மடக்கிய போலீசார், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, ஹான்சை பறிமுதல் செய்து, மொத்த வியாபாரியான, சேலம், தாதகாப்பட்டியை சேர்ந்த குணசேகரன், 44, உள்பட, ஐந்து பேரை கைது செய்தனர். கடந்த, 23ல், அவரது வீட்டில், 7.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். அதேநாளில், சேலம், டவுன் பெரியார் தெரு வெங்கடேஷ், 45, மஸ்ஜித் தெருவில் குடோனை வாடகைக்கு எடுத்து, ஹான்ஸ், குட்கா, பான்பராக்கை பதுக்கி விற்றது தெரிந்ததால், அவர் உள்பட, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். 24ல், செவ்வாய்ப்பேட்டைக்கு, மினி லாரியில் கடத்திவந்த, 17.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 17 மூட்டை ஹான்சை பறிமுதல் செய்த போலீசார், இளம்பிள்ளை மீரசப்தகிரி, 28, மேலவத்தாம்பட்டி கணேஷ், 27, ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் தகவல்படி, ராஜஸ்தானை சேர்ந்த சம்பத்சிங், 45, அவரது மகன் வினோத்சிங், 22, கைது செய்யப்பட்டனர். சேலம் மாநகர போலீசார், இரு மாதமாக, ஹான்ஸ், குட்கா கடத்தலில் ஈடுபடுவோர், மொத்த வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சேலத்தில், ஹான்ஸ் விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள், தென் மாவட்டங்களுக்கு வினியோகிப்பவரின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், செவ்வாய்ப்பேட்டை மொத்த வியாபாரிகள் சதீஷ், பவர்லால், சுனில், ஆனந்தகுமார் இடம் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து, சேலம் மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில் கூறியதாவது: வடமாநிலங்களில் இருந்து பெங்களூரு, சேலம் வழியாக, தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு, குட்கா, ஹான்ஸ் கடத்தி வினியோகிப்பவர் விபரம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால், கடத்தலில் ஈடுபடுவோரை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளோம். அவர்கள், விரைவில் கூண்டோடு கைது செய்யப்பட்டு, தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனைக்கு முடிவு கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X