பொது செய்தி

தமிழ்நாடு

மனைவி ஜாமினில் வெளியேறிய கணவர்: 2ம் நாளாக கண்காணிப்பாளர் விசாரணை

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

சேலம்: மனைவி ஜாமினில், கணவர் விடுவிக்கப்பட்டது குறித்து, சிறை ஊழியர்களிடம், கண்காணிப்பாளர், இரண்டாம் நாளாக விசாரித்தார். சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நடந்த கொலையில், அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார், 39, அவரது மனைவி பவித்ரா, 24, கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறை, பெண்கள் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். உயர்நீதிமன்றத்தில் மனு செய்ததில், பவித்ராவுக்கு, கடந்த, 22ல் ஜாமின் கிடைத்தது. ஆனால், ரஞ்சித்குமார், 23ல் விடுவிக்கப்பட்டார். பவித்ராவின் பெற்றோர், மகளை விடுவிக்காதது குறித்து கேட்டபோது, இது தெரியவர, மீண்டும் ரஞ்சித்குமார் அடைக்கப்பட்டு பவித்ரா விடுவிக்கப்பட்டார். இதுதொடர்பாக, சூப்பிரண்டு மதிவாணனுக்கு, விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. அதேநேரம், சேலம் மத்திய சிறை, பெண்கள் கிளை சிறையின் வார்டன், சிறை காவலர், அலுவலக ஊழியர்களிடம், கண்காணிப்பாளர் தமிழ்செல்வன், நேற்று, இரண்டாம் நாளாக விசாரித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X